பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்283

கொண்டு வருக!' என்று ஏவினர். அதன்படி, அந்நாளில் தன் தலைமயிர்
வளர்ந்ததோடு வலிமையும் வந்தமையக் கொண்டிருந்த சஞ்சோனும் அங்கு
வந்து சேர்ந்தான்.

     கொணர்கென்று - கொணர்க + என்று - 'கொணர்கவென்று' என
வரவேண்டியது, 'கொணர்கென்று' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.


                     37
மண்கவிழ்ந்த வானமென வரைந்த மாமை மண்டபத்தின்
கண்கவிழ்ந்த சிகரந்தாங் கடுத்த விருபொற் கம்பமிடைக்
கண்கழிந்த சிகைத்திறத்தோ னிற்ப நக்குக் கதங்காட்டி
விண்கழிந்த தெய்வமனோ யின்றே காட்டுன் மிடலென்றார்.
 
"மண் கவிழ்ந்த வானம் என, வரைந்த மாமை மண்டபத்தின்
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொற் கம்பம் இடை,
கண் கழிந்த சிகைத் திறத்தோன் நிற்ப, நக்கு, கதம் காட்டி,
'விண் கழிந்த தெய்வம் அனோய், இன்றே காட்டு உன் மாடல்!'
                                             என்றார்.

     "மண்ணுலகை மூடிநின்ற வானம் போல், சித்திரம் தீட்டிய அழகிய
அம் மண்டபத்தில் கவிழ்ந்து மூடி நின்ற சிகரத்தைத் தாங்கி நின்ற
அடுத்தடுத்துள்ள இரண்டு அழகிய தூண்களின் நடுவே, கண்கள் நீங்கப்
பெற்ற அத்தலைமயிர் வலிமை உடையோன் நிற்க, அப்பகைவர் அவனை
முதலில் நகைத்து, பின் சினம் காட்டி, 'வானினின்று இறங்கி வந்த தெய்வம்
போன்றவனே, இன்று உன் வலிமையை எங்களுக்குக் காட்டு!" என்றனர்.

                      38
பகைவிளைத்த வினையுதைப்ப நிற்பா ருண்டோ பாரிலெனச்
சிகைவிளைத்த திறமிக்கோ னிருதூண் டன்கைற் திறத்தொடித்து
நகைவிளைத்த மேற்சிகரம் வீழ்த்தி யெண்ணின் னள்ளரொடு
மிகைவிளைத்த தானுந்தன் வினைப்பட் டொன்னார்
                                    வென்றொழிந்தான்