"பகை விளைத்த
வினை உதைப்ப நிற்பார் உண்டோ பாரில்?' என,
சிகை விளைத்த திறம் மிக்கோன், இரு தூண் தன் கைத் திறத்து
ஒடித்து,
நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி, எண் இல் நள்ளரொடு
மிகை விளைத்த தானும் தன் வினைப் பட்டு ஒன்னார் வென்று
ஒழிந்தான் |
"தலைமயிரில்
அமைந்து கிடந்த வலிமை மிக்க சஞ்சோன், 'தமக்குப்
பகையாகத் தாமே விளைவித்துக் கொண்ட தீவினை உதைக்குங் காலத்தில்
எதிர்த்து நிற்கக் கூடியவர் இவ்வுலகில் உண்டோ?' என்று கூறிய வண்ணம்,
இரண்டு தூண்களையும் தன் கைத் திறத்தால் ஒடித்து, அதன் மூலம்
அணிகலன் போல் அமைந்த அம்மண்டபத்து மேல் சிகரத்தை வீழ்த்தி,
எண்ணற்ற பகைவரோடு, பாவம் செய்த தானும் தன் தீவினை வயப்பட்டு,
பகைவரை வென்று தானும் இறந்தான்.
நள்ளர் - 'நள்ளார்'
என்பதன் குறுக்கல் விகாரம்.
39 |
இத்திறத்தி
லிவையெல்லா மிந்நாட் டிவ்வூ ரிடத்தாகி
மெய்த்திறத்திற் கடவுணலம் விளங்கிற் றென்ன
விண்ணவன்றன்
கைத்திறத்திற் றாடொழுது நிற்ப வன்னார் கனிந்தெழுந்து
மைத்திறத்திற் கலந்தமதிட் காசை மூதூர் மருவுகின்றார். |
|
"இத் திறத்தில்
இவை எல்லாம் இந் நாட்டு இவ் ஊரிடத்து ஆகி,
மெய்த் திறத்தின் கடவுள் நலம் விளங்கிற்று" என்ன,
விண்ணவன் தன்
கைத் திறத்தின் தான் தொழுது நிற்ப, அன்னார் கனிந்து எழுந்து,
மைத் திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார். |
"இத்தன்மையாய்
இவையெல்லாம் இந் நாட்டிலுள்ள இவ்வூரில்
நிகழ்ந்து, அதன் மூலம் மெய்யான வல்லமை கொண்ட கடவுளின் சிறப்பு
விளங்கிற்று" என்று கூறி, அறஞ்சயனென்ற வானவன் தன்கைகளைத்
தரமாகக் குவித்துக் குழந்தை நாதனின் கால்களைத் தொழுது நின்றான்.
அது கேட்டு, சூசையும் மரியாளும் மகிழ்ந்து எழுந்து, மேகத்திடத்து
எழுந்து கலந்து நின்ற மதில் சூழ்ந்த காசை என்னும் ஊரை அடைந்தனர்.
|