பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்285

     மதிள் - 'மதில்' என்பதன் கடைப் போலி, மூதூர் - முதுமை + ஊர்
- மூது + ஊர் = மூதூர்.

                  காசையில் புதுமை

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

            40
திலங்குன் றாநிழ றேன்மலர் பூப்பநீர்ப்
புலங்குன் றாமழை பொய்யில தூவமே
னலங்குன் றாநகர் நாடுந யந்தெழ
வலங்குன் றாதவர் மாநக ரெய்தினார்.
 
திலம் குன்றா நிழல் தேன் மலர் பூப்ப, நீர்ப்
புலம் குன்றா மழை பொய் இல தூவ, மேல்
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ,
வலம் குன்றாதவர், மா நகர் எய்தினார்.

     மனிதர்க்கு உரிய வல்லமையில் எக்குறையும் இல்லாத அவர்கள்,
சோலைகள் குறையற்ற நிழலோடு தேன் நிறைந்த மலர்களைப் பூத்து
நிற்கவும், நீர் நிலைகள் குறையா வண்ணம் மழை தவறாமல் பொழியவும்,
தம் நலம் குன்றாமல் அந்நகரும் நாடும் இன்பத்தில் மேலோங்கவும்,
திருமகனோடு அப் பெருநகரை அடைந்தனர்.

     திலம் - 'தில்லம்' என்பதன் இடைக்குறை.

              41
புறத்து றைப்புலம் போய்நகர் வாயிலோர்
திறத்து றைப்புலம் புக்கனர் தேர்ந்தநூ
லுறத்து றைப்புல முங்கடந் துண்ணகர்க்
கறத்து றைப்புல மாயின ரெய்தினார்.
 
புறத் துறைப் புலம் போய், நகர் வாயிலோர்
திறத் துறைப் புலம் புக்கனர்; தேர்ந்த நூல்
உறு அத் துறைப் புலமும் கடந்து, உள் நகர்க்கு,
அறத் துறைப் புலம் ஆயினர், எய்தினார்.