கிடந்த + அன்னை
- 'கிடந்தவன்னை' என வர வேண்டியது.
'கிடந்தன்னை' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று. கனார் - 'கண்ணார்'
என்பதன் இடைக்குறை.
44 |
ஆங்கு நானநெய்ப்
பூவள கங்கெட
வீங்கு நோயினி லத்தின்வி ழுந்தடித்
தேங்கு மோதையைக் கேட்டவி ணர்க்கொடி
யோங்கு சூசையு ளத்திலி ரங்கினான். |
|
ஆங்கு நான நெய்ப்
பூ அளகம் கெட,
வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து, அடித்து
ஏங்கும் ஓதையைக் கேட்ட இணர்க் கொடி
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான். |
அங்கு அம்மகளிர்
தம் வாச நெய் பூசிய அழகிய கூந்தல்
குலைந்து கெடுமாறு, பெருகிய துயரத்தால் தரையில் விழுந்து, மார்பில்
அடித்துக் கொண்டு ஏங்கும் ஓசையைக் கேட்ட மலர்க்கொடி ஏந்திய
சூசை தன் மனத்தில் இரங்கினான்.
45 |
கொம்பி
லாக்கொடி போலிளங் கோதையர்
பம்பி யார்த்தழும் பாசறை நோக்கென
நம்பி நாதனை வேண்டிலி னல்லுயி
ரெம்பி ரானிடு மேவலின் மீண்டதே. |
|
"கொம்பு இலாக்
கொடி போல், இளங் கோதையர்
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு" என,
நம்பி, நாதனை வேண்டலின், நல் உயிர்
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே. |
சிறந்தவனாகிய
சூசை, "கொழு கொம்பில்லாத கொடி போல்,
இவ்விள மங்கையர் நெருங்கிப் புலம்பி அழும் துன்பத்தை நோக்கி அருள்
செய்வாய்" என்று குழந்தை நாதனை வேண்டியமையால், நம் ஆண்டவன்
இடும் ஏவலால் அந்நல்லுயிர் மீண்டது.
|