பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்290

மாலை வாய் மணம் போலவும், வாச பூஞ்
சோலை வாய் நிழல் போலவும், தூய் அறச்
சாலை வாயினர் தங்கிய முப்பகல்
காலை, வாய்ந்தது காசு அறக் காசையே.

     தூய அறச் சாலைப் போன்ற வாயை உடைய திருக்குடும்பத்தினர்
தங்கியிருந்த அம் மூன்று நாட் காலமும், பூமாலையிற் பொருந்திய மணம்
போலவும், மணமுள்ள பூஞ்சோலையிற் பொருந்திய நிழல் போலவும்,
தன்னிடமுள்ள குற்றமெல்லாம் நீங்கப் பெற்றமையால் அக்காசை மாநகரம்
மாண்பு வாய்ந்து விளங்கிற்று.

                 காசை சேர் படலம் முற்றும்.

               ஆகப் படலம் 17க்குப் பாடல்கள்.
                          1702