பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்292

கொன் தெளித்து எழுதியது என, நல் கொள்கையார்,
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என,
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு,
இன் தெளித்து எழுதிய இவர் அன்று ஏகினார்.

     நல்ல அறக் கொள்கை உடையோர், ஒளியைத் தெளித்து எழுதிய
சித்திரம் போன்ற செல்வத்தை, இது வீணே புறக் கோலமாக வண்ணம்
தெளித்து எழுதப்பட்டதென்று மதித்து விட்டு விலகுதல்போல,
இனிமையைத் தெளித்து எழுதிய சித்திரம் போன்ற இவர்கள், பொன்னைத்
தெளித்து எழுதிய சித்திரம் போன்ற அந்நகரத்தையும் நாட்டையும் விட்டு
அன்று அகன்று சென்றனர்.

                3
சூழ்விளை யேனலும் பரியுந் தோரையுங்
கூழ்விளை குலுத்தமு மிறுங்குங் கோத்திரு
நீழ்விளை நிரைத்தபற் காவு நீங்குராய்க்
காழ்விளை பழுவமுங் கடந்து போயினார்.
 
சூழ் விளை ஏனலும், பரியும், தோரையும்,
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து, இரு
நீழ் விளை நிரைத்த காவும் நீங்கு உராய்,
காழ் விளை பழுவமும் கடந்து போயினார்.

     சுற்றிலும் விளைந்து கிடந்த தினையும் பருத்தியும் மலை நெல்லும்
கூழ் அமைப்பதற்குரிய கொள்ளும் சோளமும் விளையும் கொல்லைகள்
நிரந்து கிடந்து, பெரு நிழல் விளையுமாறு மரங்கள் நிரை நிரையாக நின்ற
பல சோலைகளையும் நீங்கி நடந்து, வயிரம் பாய்ந்த மரங்களைக் கொண்ட
காடுகளையும் கடந்து மேலே சென்றனர்.

     'நிழல்' என்பதன் நீட்டல் விகாரமாகிய 'நீழல்' என்ற சொல் இறுதி
'அல்' குறைந்து கடைக்குறையாக நின்றது.

                4
நறவுசேர் பொழில்களு நாரை யஞ்சமோ
டுறவுசேர் தடங்களு முவந்த வோகையின்
றுறவுசேர் மடங்களுந் துணைத ணப்பரும்
புறவுசேர் வனங்களுங் கடந்து போயினார்.