பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்293

நறவு சேர் பொழில்களும், நாரை அஞ்சமோடு
உறவு சேர் தடங்களும், உவந்த ஓகையின்
துறவு சேர் மடங்களும், துணை தணப்பு அரும்
புறவு சேர் வனங்களும் கடந்து போயினார்.

     தேன் பொருந்திய பூஞ்சோலைகளும், நாரைகள் அன்னங்களோடு
உறவு கொண்டு வாழும் தடாகங்களும், மகிழ்ந்த இன்பத்தோடு துறவிகள்
வாழும் மடங்களும், துணையை விட்டுப் பிரிதற்கரிய புறாக்கள் கூடி
வாழும் காடுகளும் கடந்து சென்றனர்.

     புறவு -- புறா; நிலவு - நிலா என்பது போல.

                 5
பூணெறி யொளியொடு புடைவிண் ணோர்வர
நீணெறி கடந்துபோய் நெடிய நெற்றியாற்
சேணெறி தவழ்மலை செல்லச் சேர்ந்திரு
கோணெறி யும்பர்வந் தெதிர்கொண் டாரரோ,
 
பூண் எறி ஒளியொடு புடை விண்ணோர் வர
நீள் நெறி கடந்து போய், நெடிய நெற்றியால்
சேண் நெறி தவழ் மலை செல்ல, சேர்ந்து இரு
கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ.

     அணிகலன்கள் வீசும் ஒளியோடு வானவர் புடை சூழ்ந்து வர
இவர்கள் நீண்ட வழி கடந்து போய், தன் நெடிய சிகரத்தால் வானளாவத்
தவழும் சீனயி மலையைச் சென்றடையவும், இரு விண்மீன்கள் என்னத்தக்க
வானவர் இருவர் சேர்ந்து வந்து எதிர் கொண்டனர்.

     'அரோ' அசைநிலை.

                 6
பொன்னினீர் மிளிர்திருப் புதல்வன் றாளிணை
மின்னினீ ரவர்தொழ வீழ்ந்து சூசையுள்
ளுன்னிநீ ரெவர்சொன்மி னுற்ற தென்றலுந்
துன்னிநீர்ச் சட்சதன் றொழுது சொற்றினான்.
 
பொன்னின் நீர் மிளிர் திருப் புதல்வன் தாள் இணை,
மின்னின் நீரவர், தொழ வீழ்ந்து, சூசை உள்
உன்னி, "நீர் எவர்? சொல்மின் உற்றது" என்றலும்,
துன்னி நீர்ச் சட்சதன் தொழுது சொற்றினான்: