எசித்தியர்
அடிமையினின்று யூதரை மீட்டு உரிமை மக்களாக
வாழ்வித்தமையின், மோயிசன் யூதர் கோலை நிமிர்த்தியவன் ஆவான்.
'கோல்' இங்கு ஆட்சிக்கு ஆகுபெயர்.
பத்துக் கட்டளைகள்
13 |
கோணிகந்தான்
வானிறைவ னேவல் கொண்ட குலக்கோமான்
சேணிகந்தான் சேண்சென்ற குன்றத் துச்சி செல்கின்றா
னூணிகந்தான் றுயிலிகந்தான் வானோ ரொத்தாங்
குறைந்தனகான்
மாணிகந்தார் மனம்போல விருண்டி யாவு மருண்டனவே. |
|
"கோண் இகந்து
ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குலக்
கோமான்
சேண் இகந்தான்; சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான்;
ஊண் இகந்தான்; துயில் இகந்தான்; வானோர் ஒத்து ஆங்கு
உறைந்தனகால்,
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே. |
"நீதியினின்று
கோணுதல் இன்றி யாவற்றையும் ஆண்டு நடத்தும்
வானகத்துள்ள ஆண்டவன் இட்ட கட்டளையை ஏற்றுக் கொண்ட யூதர்
குல மன்னனாகிய மோயிசன் நெடுந்தூரம் கடந்து சென்றான்; அவ்வாறு
வானளாவிச் சென்ற மலையின் உச்சிக்குச் செல்கின்றான்; அங்கு
உணவையும் துறந்தான், உறக்கத்தையும் மறந்தான்; இவ்வாறு, வானவருக்கு
நிகராக அங்குத் தங்கியபோது, அறமாண்பற்றவர் மனம்போல இருண்டு,
யாவும் மயக்கம் கொண்டன.
14 |
கோடொளிப்ப வெழினியெழ வெழிலி மொய்ப்பக் குடக்கிரவிச்
சேடொளிப்ப விராவன்ன விருள்சூழ் மண்டித் திரண்டவிரு
ளீடொளிப்ப விளக்கிட்ட தேபோன் மின்னி யெரிவாய்மின்
னூடொளிப்ப வொல்கியிடித் துலக மெல்லா மொலித்தனவே. |
|