"கோடு ஒளிப்ப
எழினி எழ எழிலி மொய்ப்ப, குடக்கு இரவிச்
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி, திரண்ட இருள்
ஈடு ஒளிப்ப விளக்கு இட்டதே போல் மின்னி, எரிவாய் மின்
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம் எல்லாம் ஒலித்தனவே. |
"மலையை மூடி
மறைக்கத் திரையிட்ட தன்மையாக மேகங்கள்
திரண்டு மொய்த்தன. மேற்கே பகலவன் தன் ஒளியை மறைத்துக்
கொள்ளவே இரவு போன்ற இருள் எங்கும் மண்டியது. திரண்ட இருளின்
வலிமையை மறைக்க விளக்கு இட்டதேபோல் மின்னல்கள் எழுந்தன.
எரியும் தன்மை வாய்ந்த மின்னல்களும் ஊடே சென்று மறையுமாறு அம்
மேகங்கள் ஒடுக்கிக் கொள்ளவே, இடிகள் உள்ளிருந்தவாறே இடித்து
உலகமெல்லாம் சென்று ஒலித்தன.
15 |
புழுங்கியவா
யெரிசெந்தீப் புரிசை சூழ்ந்தாற் போன்றோயா
தழுங்கியவாய் முகில்மின்னி யெண்ணைந் நாளுந் தாழெவரு
மழுங்கியவாய் மெலிந்தஞ்ச விறைவன் றாட்சேர்ந்
தார்ந்தமிர்தம்
விழுங்கியவாய் மோயிசனே வாழ்ந்த வண்ணம் விளம்பரிதால். |
|
"புழுங்கிய வாய்
எரி செந் தீப் புரிசை சூழ்ந்தாற் போன்று, ஓயா
தழுங்கிய வாய் முகில் மின்னி, எண் ஐந் நாளும், தாழ் எவரும்
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச, இறைவன் தாள் சேர்ந்து, ஆர்ந்து
அமிர்தம்
விழுங்கிய வாய் மோயிசனே வாழ்ந்த வண்ணம் விளம்பு அரிது ஆல். |
"புழுங்கிய
வாயோடு எரியும் செந்தீயாலாகிய மதில் சூழ்ந்து
நின்றாற் போன்று, முழங்கும் வாயையுடைய மேகம் ஓயாமல் மின்னி,
நாற்பது நாட்களாய், அம்மலையடியிலுள்ள யாவரும் வருந்திய
தன்மையாய் மெலிந்து அஞ்சினர். அப்பொழுது ஆண்டவன் அடியை
அணுகி, அவ்வின்பமாகிய அமிழ்தத்தை நிறைவாக உண்ட வாயைக்
கொண்டுள்ள மோயிசன் வாழ்வு பெற்ற வண்ணம் சொல்லுதற்கு
அரிதாகும்.
'ஆல்'
அசைநிலை.
|