பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்301

                     19
தனத்தெழுதி வைத்ததென வுறுதி ஞானத் தகுதியினான்
மனத்தெழுதி வைத்தமறை மறையத் தீமை மல்கியதாற்
கனத்தெழுதி வைத்தமின லொத்த வாழ்க்கை காதலித்துப்
புனத்தெழுதி வைத்தபொரு ளொத்தவ் வேதம்
                                புறத்தொழிந்தார்.
 
"'தனத்து எழுதி வைத்தது என, உறுதி ஞானத் தகுதியின் நான்
மனத்து எழுதி வைத்த மறை மறையத்தீமை மல்கியதால்,
கனத்து எழுதி வைத்த மினல் ஒத்த வாழ்க்கை காதலித்து,
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து, அவ்வேதம் புறத்து
                                            ஒழிந்தார்.

     "பொன்னில் பொறித்து வைத்தது போல், தம் அறிவுத் தகுதியினால்
தாமே உறுதி கொள்ளுமாறு மாந்தர் மனத்தில் நான் எழுதி வைத்த வேதம்
மறையும் அளவிற்குத் தீமை பெருகியமையால், மேகத்தில் பொருத்திவைத்த
மின்னல்போல் மறையும் இவ்வுலக வாழ்க்கையைக் காதலித்து, காட்டில்
எழுதிவைத்த கல்விப் பொருள் போல் அவ்வேதத்தையே தாம் புறக்கணித்து
ஒழிய விட்டனர்.

     மனத்தில் இயல்பாக உணருமாறு எழுதாது எழுதி வைத்த இவ்வேதம்
'இயல் வேதம்' எனப்படும்; கல்லில் எழுதிக் கொடுத்த வேதம் 'வரி வேதம்'
எனவும், இயேசு வந்து தம் உரையாலும் வாழ்வாலும் அருளிய வேதம்
'அருள் வேதம், எனவும் பெயர் பெறும். ''புனத்தெழுதி வைத்த பொருள்'
என்பதற்கு' மலை நின்றிழியு மருவி மணல் மேலெழுதிய கல்விப் பொருள்'
என்பது பழைய உரை.

                      20
மருள்மொய்ப்பத் தீவினையு மிருளு மொய்த்து மனுக்குலத்தோ
ரிருள்மொய்ப்ப மனத்தெழுதி வைத்த நுண்மா ணெழுத்துணரா
பொருள்மொய்ப்பத் திரிந்தந்தோ குருட்டால் வீழ்வர்
                                    புதவிலெனா
வருள்மொய்ப்பக் கல்லிடையம் மறையைத் தீட்டி
                                    யளிப்பலென்றான்.