" 'மருள் மொய்ப்பத்தீவினையும்
இருளும் மொய்த்து, மனுக்குலத்தோர்,
இருள் மொய்ப்ப, மனத்து எழுதி வைத்த நுண்மாண் எழுத்து உணரா,
பொருள் மொய்ப்பத் திரிந்து, அந்தோ, குருட்டால் வீழ்வர் புதவில் எனா
அருள் மொய்ப்ப, கல்லிடை அம் மறையைத் தீட்டி அளிப்பல்' என்றான்.
|
" 'மனத்தில்
மயக்கம் பெருகவே தீவினையும் இருளும் பெருகின,
அவ்வாறு இருள் பெருகியமையால், தம் மனத்தில் எழுதி வைத்த நுண்ணிய
மாண்புள்ள அவ்வெழுத்தை மனித குலத்தோர் உணராமல், செல்வப்
பொருளையே தேடித்திரட்ட அலைந்து திரிந்து, ஐயோ, அறிவுக் குருட்டால்
நரகத்தில் விழுவரே என்று மிகுதியான அருள் கொண்டு, அவ்வேதத்தை
இனிக் கல்லில் தீட்டித் தருவேன்' என்றான்.
21 |
மின்னல்லா
னிகர்ப்பரிதோ ரெழுத்துத் தீட்டி விதித்திருகல்
லென்னல்லா லிறைமையுளா ருமக்கில் லாவீ ரெனைமெய்மை
தன்னல்லாற் சாட்சிவையீர் திருநா ளாடித் தவிர்கில்லீர்
மன்னல்லா ரணமிதுவென் றொருகல் கொள்முவ் வாசகமே. |
|
"மின் அல்லால்
நிகர்ப்பு அரிது ஓர் எழுத்தில் தீட்டி, விதித்து
இரு
கல்,
'என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர்; எனை
மெய்மை
தன் அல்லால் சாட்சி வையீர்; திரு நாள் ஆடித் தவிர்கில்லீர்;
மன் நல் ஆரணம் இது' என்று, ஒரு கல் கொள் முவ் வாசகமே. |
"மின்னலேயன்றி
வேறொன்றும் ஒப்பாகாத ஓர் எழுத்து வடிவத்தால்
கடவுள் தாமே தீட்டி, அவ்வாறு இரண்டு கற்களைத் தந்தான். தந்த ஒரு
கல்லில் எழுதப் பெற்றிருந்த மூன்று வாசகங்கள், 'என்னைத் தவிரத்
தெய்வத்தன்மையும் தலைமையும் கொண்ட தெய்வங்களென்று உள்ளவர்
ஒருவரும் உமக்கு இல்லையென்று கொள்ளக் கடவீர் : உண்மைக்கே
அல்லாமல், பொய்மைக்கு, ஆணையிட்டு என்னைச் சாட்சியாக வையாதீர்;
குறிக்கப்பட்ட திருநாட்களை முறைப்படி கொண்டாடத் தவறாதீர். இது
நிலை பெற்ற நல்ல வேதவிதி ஆகும்' என்று இவ்வாறு அமைந்தன.
|