'அமைந்தன'
என ஒரு சொல் வருவித்து முடிக்க. அடுத்த
பாடலுக்கும் இது பொருந்தும். "இம் மூன்றும் கடவுளை நோக்கி முதற்
கல்லிலே எழுதிய வேதவிதிகள்" என்பது பழைய உரைக் குறிப்பு. திருநாள்
என்பது, பழைய வேத முறைப்படி, ஓய்வு நாட்களாகிய சனிக்கிழமைகளும்
குறிப்பிட்ட சில பண்டிகைகளும் ஆகும்.
22 |
தந்தையாய்
வணங்குமினீர் கொலையே செய்யூர் தவிர்காம
நிந்தையா யூடில்லீர் கரவீர் பொய்யீர் நிலைப்பிறரில்
சிந்தையா யிரீர் பிறர்கைப் பொருளை வெஃகீர் தீங்கிதுவென்
றெந்தையாய்ந் திரண்டாங்கல் தீட்டி வைத்த வேழ்விதியே. |
|
" 'தந்தை தாய்
வணங்குமின் நீர்; கொலையே செய்யீர்; தவிர் காமம்
நிந்தையாய் ஊடு இல்லீர்; கரவீர் பொய்யீர்; நிலைப் பிறர் இல்
சிந்தையாய் இரீர்; பிறர் கைப் பொருளே வெஃகீர்; தீங்கு இது' என்று,
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே. |
"நம் தந்தையாகிய
கடவுள் ஆராய்ந்து இரண்டாங் கல்லில் தீட்டி
வைத்த ஏழு கட்டளைகள், 'நீவிர் உம் தந்தையையும் தாயையும்
வணங்குவீர்; கொலையே செய்யாதீர்; தவிர்க்கத்தக்க காமம்
நிந்தைக்குரியதெனக் கொண்டு அதனோடு உறவாடாதீர்; களவு செய்யாதீர்;
பொய் சொல்லாதீர்; நிலைத்த மண வாழக்கை மேற்கொண்ட பிறர் மனைவி
மீது சிந்தையே கொள்ளாதீர்; பிறர் கைப்பொருளை விரும்பாதீர்; இது
வெல்லாம் பாவம்' என்று அமைந்தன.
23 |
மின்முகத்துப்
பொறித்தவணி யிருகல் லேந்தி
வெஞ்சுடர்போ
னன்முகத்து மோயிசன்வில் வீசி வெற்பின்
னயந்திழிந்தான்
புன்முகத்து மனுமகனிந் நாத னந்நூற் புரிந்தமையாற்
றன்முகத்துத் தாட்பணிய வுற்ற தென்றான் சட்சதனே. |
|