இப்பாடல் இரவுக்
காட்சியாகவும் முந்திய பாடல் பகற் காட்சியாகவும்
கொள்க. இரவுக்கு மயக்கமாவது, தானே இருண்டதோ, தன்னினும்
சோலையே இருண்டதோ என்று கொண்ட மயக்கம்.
29 |
இணங்கிய
மலர்க்கா வங்கண் ணெரிமுகத் தனுங்கிற் றன்ன
உணங்கிய தருவைக் கண்டா ருவந்துதாம் வதிந்த பின்ன
ரணங்கிய விலையும் பூவு மணிந்தவத் தருவே தம்மை
வணங்கிய தன்மை கோலி வனப்பரி தணியக் கண்டார். |
|
இணங்கிய மலர்க்கா
அங்கண், எரி முகத்து அனுங்கிற்று அன்ன,
உணங்கிய தருவைக் கண்டார்; உவந்து, தாம் வதிந்த பின்னர்,
அணங்கிய இலையும் பூவும் அணிந்த அத் தருவே, தம்மை
வணங்கிய தன்மை கோலி, வனப்பு அரிது அணியக் கண்டார். |
தாம் இணங்கித்
தங்கியிருந்த அப்பூஞ்சோலையில், நெருப்பு தன்னைச்
சுட்டு வருத்தியதுபோலக் காய்ந்து நின்ற ஒரு மரத்தை சூசையும் மரியாளும்
கண்டனர்; தாம் அங்கே சிறிது தங்கியிருந்த பின்னர், தான் மகிழ்ந்ததுபோல
இலையும் பூவும் அணிந்து நின்ற அந்த மரமே, தம்மை வணங்கியதுபோலத்
தலையை வளைத்து, அரியதோர் அழகை அணிந்து நிற்கவும் கண்டனர்.
30 |
தீய்நிறப்
பவளக் கொம்பின் மரகத விலைக டீர்ந்து
தூய்நிறத் தரள மொட்டுந் தூய்மணி மலரும் பூத்துக்
காய்நிறத் திலங்க வெண்பொன் கனகநற் கனிகள் காய்த்து
மீய்நிறத் தருவின் வண்ண மீவளர் வண்ணம் போன்றே. |
|
தீய் நிறப்
பவளக் கொம்பின், மரகத இலைகள் தீர்ந்து
தூய் நிறத் தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து,
காய் நிறத்து இலங்க வெண்பொன், கனக நல் கனிகள் காய்த்து,
மீய் நிறத் தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே. |
|