35 |
தீட்டிய
விருகல் லேந்திமோ யிசன்போய்த் திசைகணான்
குரைத்தநன் மறைநூல்
காட்டிய நெறிசென் றொழுகமன் னுயிர்கள் களிப்பிலிக்
காவிலித் தருவு
நீட்டிய சிவைவிட் டுறைமுகி னக்கி நிகர்ப்பரி தெழுதிய மாமை
யீட்டிய மணிப்பூஞ் சினைகளைப் பரப்பி யிருநில நிழற்றிநின்
றதுவே. |
|
"தீட்டிய இரு
கல் ஏந்தி மோயிசன் போய், திசைகள் நான்கு உரைத்த நல்
மறை நூல்
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள், களிப்பில் இக் காவில் இத்
தருவும்
நீட்டிய சிவை விட்டு, உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை
ஈட்டிய மணிப் பூஞ்சினைகளைப் பரப்பி, இரு நிலம் நிழற்றி நின்றதுவே. |
"பத்துக் கட்டளைகள்
தீட்டப் பெற்ற இரு கற்களையும் மோயிசன்
ஏந்திக்கொண்டு இறங்கிப் போய், நான்கு திசைகளிலும் தான் உரைத்த
நல்ல வேதநூல் காட்டிய நெறியிலே நிலைபெற்ற மனித உயிர்கள் சென்று
ஒழுகவே, அதனால் அமைந்த மகிழ்ச்சியால் இச்சோலையில் இந்த மரமும்
நீளமாய் வேர் விட்டு, துளிகளைக்கொண்ட மேகத்தைத் தடவி ஒப்பற்ற
தன்மையாய் எழுதியது போன்ற அழகைத் தாங்கிய மரகத மணி போன்ற
பூங்கிளைகளைப் பரப்பி, பெரிய இவ்வுலகத்திற்கு நிழல் தந்து நின்றது.
36 |
இன்புற வுயிர்செய்
யித்தருக் கனிக ளியாமுணப் பிறர்கையி லிரந்து
துன்புறப் போவ லென்னெனப் பலருஞ் சூழ்ந்துதங் காவினஞ் சுகுங்கா
யன்புற வினிதென் றருந்தெனப் பலபொய் யாரண மெங்கணும் விதித்த
பின்புற மலர்ந்த வித்தரு நொந்த பெற்றிபோன் மெலிந்தது மாதோ.
|
|