"இன்பு உற உயிர்
செய் இத் தருக் கனிகள் யாம் உண, 'பிறர்
கையில் இரந்து
துன்பு உறப் போவல் என்?' எனப் பலரும் சூழ்ந்து, தம் காவின்
நஞ்சு உகும் காய்
அன்பு உற, இனிது என்று அருந்து என, பல பொய் ஆரணம்
எங்கணும் விதித்த
பின்பு, உற மலர்ந்த இத் தரு, நொந்த பெற்றி போல் மெலிந்தது
மாதோ, |
"இன்பம் கொள்ளுமாறு
உயிர் தரும் அம் மரக் கனிகளை
நாமெல்லாம் உண்ணக் கண்டு முன் நன்கு மலர்ந்து நின்ற இம் மரமே,
'இதனைப் பெறவேண்டிப் பிறர் கையில் இரந்து துன்பங்கொள்ளப் போதல்
ஏன்?' என்று பலரும் தமக்குள் ஆலோசித்து தம் காட்டிலுள்ள நஞ்சைச்
சொரியும் காயின் மீது அன்பு கொண்டு, அதுவே இனிதென்று
அருந்துவதுபோல, பல பொய் வேதங்களை எங்கும் தமக்கென்று
விதித்துக் கொண்ட பின்பு, அது கண்டு நொந்த தன்மைபோல் மெலிந்தது.
'மாதோ' அசைநிலை.
இப் பாடலுக்குப் பழைய உரை
பொருந்துவதன்று நஞ்சுருங்காயை இனிதென்று அருந்துவோர் தாமே,
'இன்புற உயிர் செய் இத் தருக் கனிகள்' என்று குறித்ததாகக் காட்டுதல்
பொருந்தாது : 'உற மலர்ந்த இத்தரு' என்பதற்குக் காரணம் காட்டியதும்
ஆகாது, இப்பாடல் வேற்று நாட்டவர் வழிவந்த சமயம் என்பதற்காக
உண்மைச் சமயத்தை ஏற்றுக் கொள்ளாத வக்கிரப் போக்கைக் கடிந்து
கூறுவது.
37 |
மனத்தெழுஞ்
சுருதி மெலிந்தன வளவில் வனப்பெலா
மொழிந்துதான் மெலியக்
கனத்தெழுங் கொம்பர் வாடலே கண்டீர் கருணையோ
டிப்பிரான் மாக்க
ளினத்தெழுந் தெங்கு மிம்மறை வழங்கு மென்றிவ னெய்திய
முகத்திற்
றனத்தெழு மலருங் கனிகளும் பூத்துத் தருவெலா முவந்தது
கண்டீர். |
|