"மனத்து எழும்
சுருதி மெலிந்தன அளவில், வனப்பு எலாம் ஒழிந்து
தான்
மெலிய,
கனத்து எழும் கொம்பர் வாடலே கண்டீர்; கருணையோடு இப் பிரான்
மாக்கள்
இனத்து எழுந்து, எங்கும் இம்மறை வழங்கும் என்று, இவன் எய்திய
முகத்தில்,
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து, தரு எலாம் உவந்தது கண்டீர். |
"மனிதர் மனத்தில்
இயல்பாக எழும் வேத உணர்வு மெலிந்த
அளவிற்கேற்ப, இம்மரம் தன் அழகெல்லாம் ஒழிந்து தானும் மெலியவே,
மேகத்தை நோக்கி எழுந்த அதன் கொம்புகளும் வாடியதைக் கண்டீர்கள்;
இவ்வாண்டவன் கருணையோடு மக்கள் இனத்தில் ஒருவனாக உதித்து
வந்து, பின் எங்கும் இவ் வேதமே வழங்குமென்று இம்மரம் கண்டு, இவன்
தன்னை வந்தடைந்த இடத்து, பொன் போல் எழுந்து தோன்றும்
மலர்களையும் கனிகளையும் தோற்றுவித்து, முழுவதும் மகிழ்ந்த தயையும்
கண்டீர்கள்,
38 |
வெல்லின்மேல்
வரையில் வரைந்ததூ லிவன்றான் றீட்டவோர் விலங்கலு
மேறிக்
கல்லின்மேல் வரைந்த வெழுத்தொழிந் தாகக் கண்டருந் தயையினச்
சுருதி
யெல்லின்மேல் மிளிர்தன் னுடலமே டாக விருப்பயி லாணியாற் பொறித்து
வில்லின்மே லவிர்செம் புனலின்மை யிட்டு மெலிவற விளங்கலே
செய்வான். |
|
"செல்லின் மேல்
வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர்
விலங்கலும்
ஏறி,
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆகக் கண்டு, அருந்
தயையின்
அச் சுருதி
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக, இரும்பு அயில்
ஆணியால்
பொறித்து,
வில்லின் மேல் அவர் செம்புனலின் மை இட்டு, மெலிவு அற
விளங்கலே
செய்வான். |
|