பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்314

     "கல்லின்மேல் வரைந்து தந்த எழுத்தாகிய வரி வேத ஒழுங்கு
மக்களிடையே ஒழிந்ததாகக் கண்டு. மேகத்தின் மேல் நின்று இச் சீனயி
மலையில் வரைந்து தந்த அவ்வேத நூலை இவ் வாண்டவன் தானும்
மீண்டும் தீட்டித் தருமாறு ஒரு மலையில் ஏறி" அரிய தயவோடு
அவ்வேதத்தைக் கதிரவனுக்கும் மேலாக மிளிரும் தன் உடலையே
ஏடாகக் கொண்டு, கூர்மையான இரும்பாணியால் பொறித்து,
வில்லொளியினும் மேம்பட விளங்கும் தன் குருதியாகிய மையைத் தடவி,
அவ்வேதம் மீண்டும் மெலியாது விளங்கச் செய்வான்.

     இரும்பு + ஆணி - இருப்பு + ஆணி : இருப்பாணி. விலங்கல்
தானும் ஏறி' எனவும், 'அயில் இரும்பு ஆணி' எனவும் மாற்றிக் கூட்டுக.
இச்செய்யுளின் கருத்து 16 : 55இல் வருவதைக் காண்க.

                     39
நனைமுகத் துவந்து நக்கவித் தருப்போ நரதெய்வ குமாரனீங்
                                  கருளும்
வினைமுகத் தெழீஇய மறைவனப் பெய்தி வெகுண்டநாற்
                                  றிசைவளி யெழுந்து
முனைமுகத் தடித்த தன்மையின் மறையை முருக்கிடப்
                                  பலமதத் தாருங்
கனைமுகத் துலகு மலகையு முடலுங் கதத்தநாற் பகைகள்
                                  மொய்ப் பனவே.
 
"நனை முகத்து உவந்து நக்க இத் தருப் போல், நர தெய்வ குமாரன்                                        ஈங்கு அருளும்
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி, வெகுண்ட நால் திசை                                        வளி எழுந்து,
முனை முகத்து அடித்த தன்மையின் மறையை முருக்கிட, பல                                        மதத்தாரும்,
கனை முகத்து உலகும், அலகையும் உடலும் கதத்த நால் பகைகள்                                        மொய்ப்பனவே.

     "அரும்பு போன்ற இவன் முகத்தைக் கண்டு மகிழ்ந்து சிரித்த இம்
மரத்தைப் போல், மனிதனும் இறைவனுமாகிய இத் திருமகன் இவ்வுலகில்
அருள் கூர்ந்து செய்யும் செயலின் மூலமாக எழுப்பிய வேதமும் பொலிவு
பெற்று விளங்குகையில், நான்கு திசையினின்றும் சினந்தெழுந்த
காற்றுப்போல் எழுந்து, போர்முனையில் தாக்கிய தன்மை போல்
அவ்வேதத்தை அழிக்கவென்று, பல புற மதத்தாரும், இரைந்து தன்
முகமாய் இழுக்கும் உலகமும், பேயும், உடலும் சினந்த நான்கு பகைகளாகத்
திரண்டு எழும்.