பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்315

                    40
வேரற வடித்த வளியென வெங்கும் விளைத்தபற் பகையிவ                                        னருளா
னேரற நீங்கிக் கிருமிதீண் டியகாய் நிகர்த்தபற் றெஞ்சின                                        ரல்லாற்
பேரற நல்லோர் சிதைவுறா வாழ்ந்து பெயர்கில மறையொடு                                        பொலிந்து
சூரற நிற்பா ரித்தருப் போன்றித் தோன்றல்செய் யுறுதியா                                        லென்றான்.
 
"வேர் அற அடித்த வளி என எங்கும் விளைத்த பல் பகை இவன்                                    அருளால்
நேர் அற நீங்கி, கிருமி தீண்டிய காய் நிகர்த்த பற்று எஞ்சினர்                                    அல்லால்,
பேர் அற நல்லோர் சிதைவு உறா வாழ்ந்து, பெயர்கு இல மறையொடு                                    பொலிந்து
சூர் அற நிற்பார் இத் தருப் போன்று, இத் தோன்றல் செய்                                    உறுதியால்" என்றான்.

     "வேரற்று விழுமாறு அடித்த காற்றுப் போல எங்கும் விளைந்த பல
பகைகளும் இவ்வாண்டவன் அருளால் நேரே அறுந்து நீங்கும்; புழுக்களால்
அரிக்கப்பட்ட காய்கள் போல மேற்கூறிய நால்வகைப் பற்றுக்களில் மிஞ்சி
நின்றவரே அல்லாமல், பேரறம் பூண்ட நல்லோர் சிதையாமல் வாழ்ந்து, இத்
திருமகன் வழங்கும் உறுதிப்பாட்டால், மாறுதல் இல்லாத இவ்வேதத்தோடு
தாமும் பொலிந்து, இந்த மரத்தைப் போல் துன்பமின்றி நிலைபெறுவர்"
என்று முடித்தான் சட்சதன்.

                    41
இனையன கேட்ட விருந்தவத் திறைவ னேந்திய மகவினை                                       நோக்கி
தனையன வுலகம் படைத்திநின் கருணை தளிர்ப்பநற்                                   சுருதிநூ லுரைத்தி
யனையன போதா மைந்தனா யுதித்தி யம்மறை வழங்கநோ                                       யுற்றி
முனையன வுலகத் தோருனைப் பகைத்து முதிர்துய ரழுந்துதி                                       யந்தோ.