பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்317

"இன் ஒளி மகவே, நினைப் பகைக்கினும், நீ ஈந்த நூல் பகைக்கினும்,
                                             கயவர்,
பொன் ஒளி சுடரச் சுடும் தழல் அனை அப் புன்கணால் பொலிவு உறப்
                                             பெருகி,
நின் ஒளி குன்றா, நின் மறை குன்றா, நினைத்த நின் அருள் தொழில்
                                             முடிப்பாய்,
மன் ஒளி மதுகையோய்" எனக் கண்ணீர் மலர் அடிக்கு அணி எனப்
                                             புனைந்தான்.

     "இன்பம் தரும் ஒளி கொண்ட மகனே, தீயவர் உன்னைப்
பகைத்தாலும், நீ தந்த வேத நூலைப் பகைத்தாலும் பொன்னின் ஒளி சுடர்
விடுமாறு சுடும் நெருப்புப் போன்ற அத் துன்பங்களால் நீ பொலிவே
பெற்றுப் பெருகி, உன் ஒளி குன்றாமலும், உன் வேதம் குன்றாமலும், நிலை
பெற்ற ஒளியையே வலிமையாகக் கொண்டவனே, நீ நினைத்த உன் அருட்
செயலை நிறைவேற்றுவாய்" என்று சூசை கூறி, தன் கண்ணீரை அவன்
மலர் போன்ற திருவடிக்கு அணிகலனாகச் சூட்டினான்.

                மரியாள் ஏக்கமும் ஊக்கமும் :

      - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

              43
சினைவ ருங்கனித் தீஞ்சுவை யுண்டபின்
ளனைவ ரும்பொழி னின்றுந டந்துபோய்க்
கனைவ ருங்குளிர் கால்சவ ரஞ்செயச்
சுனைவ ருஞ்சுரு திக்கிரி நீங்கினார்.
 
சினை வரும் கனித் தீம் சுவை உண்ட பின்,
அனைவரும் பொழில் நின்று நடந்து போய்,
கனை வரும் குளிர் கால் சவரம் செய,
சுனை வரும் சுருதிக் கிரி நீங்கினார்.

     மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து இனிய சுவையோடு
உண்ட பின், அனைவரும் அச்சோலையினின்று நடந்து போய்,
இரைச்சலோடு வரும் குளிர்ந்த காற்று சாமரை போல் வீச, சுனைகள்
நிறைந்த வேத மலையாகிய சீனயி மலையை நீங்கிச் சென்றனர்.