பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்319

     "ஆதன் இருந்த பூங்காவன நடுவில் வைத்த ஒரு மரத்தின்
கனிகளை உண்பவர் எக்காலத்தும் சாவின்றி வாழ்வரென்று, அதற்கு
'உயிர் மரம்' என்னும் பெயராயிற்று" என்பது பழையவுரை அடிக்குறிப்பு.

     என்கோ + யான் - என்கோவியான்; உயிர் முன் யகர மெய்
உயிர்போல் உடம்படு மெய் பெற்று, அதன் மேல் மெய் போல் நின்று
இகரம் பெற்று முடிந்தது. பின்வருவனவற்றிற்கும், இது கொள்க.
உண்மையைக் குறிக்கும் சரதம் என்ற சொல் காலை ரகரமாக மயங்கக்
கொண்டு, 'சாதம்' என நின்றது.

            46
உம்ப ரின்சுவை யிக்கனி யுண்டுநீள்
கொம்ப ரின்னிழற் கீழுறை கோதிலா
ரம்ப ரின்புறு மண்டரென் கோவியா
னிம்ப ரின்னுயிர் வாழ்வரென்
                     கோவியான்.
 
"உம்பரின் சுவை இக் கனி உண்டு, நீள்
கொம்பர் இன் நிழற் கீழ் உறை கோது இலார்
அம்பர் இன்பு உறும் அண்டர் என்கோ யான்?
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான்?

     "வானுலக அமிழ்தத்துக்குரிய சுவை கொண்டுள்ள இக்கனியை உண்ட,
இம்மரத்தின் நீண்ட கொம்புகள் தரும் இனிய நிழலின் கீழ்த் தங்கும்
பேறுகொண்ட குற்றமற்றவர் அவ்வானுலகில் இன்புறும் வானவர் மட்டுமே
என்பேனோ? இவ்வுலகில் இனிய உயிரோடு வாழும் மானிடர் என்பேனோ?

               47
அறத்துச் செவ்வழி யாரண மெந்தைகைத்
திறத்துத் தீட்டிய சீர்பெரி தென்கனோ
மறத்துத் தேரில மாக்கள துட்கொளா
புறத்துப் போக்குபு ரைபெரி தென்கனோ.
 
"அறத்துச் செவ் வழி ஆரணம் எந்தை கைத்
திறத்து தீட்டிய சீர் பெரிது என்கனோ?
மறத்துத் தேர் இல மாக்கள், அது உட் கொளா,
புறத்துப் போக்கு புரை பெரிது என்கனோ?