"அறத்துக்கு
ஏற்ற செவ்வையான வழியாகிய வேதத்தை நம்
தந்தையாகிய ஆண்டவன் தன் கைத் திறம் காட்டி எழுதித் தந்த சிறப்பே
பெரிது என்பேனோ? தம் பாவத்தால் அதனைத் தெளிய மாட்டாத மக்கள்,
அதனை ஏற்றுக் கொள்ளாமல், புறக்கணித்துத் தள்ளும் குற்றமே பெரிது
என்பேனோ?
48 |
தொல்லின்
றம்மனத் தாசறத் தோன்றிய
வெல்லின் ணொண்மறை யிற்றொழிந்
தாரெனச்
செல்லின் னோங்கிய வின்னசி லம்புமேற்
கல்லின் றீட்டிய வாண்டகை காட்டினான். |
|
"தொல்லின்
தம் மனத்து ஆசு அறத் தோன்றிய
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என,
செல்லின் ஓங்கிய இன்ன சிலம்பு மேல்,
கல்லின் தீட்டிய ஆண்டகை காட்டினான். |
"பழங்காலத்தில்
தம் மனத்துள் குற்றமறத் தோன்றிய கதிரொளியாய்
அமைந்த இயல்வேதம் மறையவே மக்கள் அழிவிற்கு ஆளாயினரென்று
கண்டு, மேகத்தின் மேல் உயர்ந்து நின்ற இம் மலையின் மேல் நின்று,
அதனையே ஆண்டவன் கல்லில் தீட்டிக் காட்டினான்.
'தீட்டிய காட்டினான்'
என்று இணைத்துப் பொருள் காண்க :
செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம் இறந்த காலப்
பொருளில் நின்றது.
49 |
தீட்டிக்
காட்டிய திவ்விய நூல்புற
நாட்டிற் கற்றதெ னாதரர் பற்கதை
பூட்டிப் போற்றரு நூலெனப் பொற்பறங்
கோட்டிக் கோதுல கார்ந்தன கொள்கையே. |
|