பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்322

               51
பொய்யைக் காட்டிய நின்னையம்
                       பொய்யற
மெய்யைக் காட்டிய வேதமு நூக்கினர்
கையைக் காட்டியு ரைப்பவர் காதையே
மையைக் காட்டினு நூலென வவ்வரே.
 
"பொய்யைக் காட்டிய நின்னையும்,
                         பொய் அற
மெய்யைக் காட்டிய வேதமும் நூக்கினர்,
கையைக் காட்டி உரைப்பவர் காதையே
மையைக் காட்டினும், நூல் என வவ்வரே.

     "பொய்யைச் சுட்டிக் காட்டிய உன்னையும், அப்பொய் நீங்குமாறு
மெய்யைக் காட்டிய உன் வேதத்தையும் தள்ளி விட்டவர், கையை
அசைத்துக் காட்டி ஓங்கிக் கூறுபவர் கதைகளையே, அவை குற்றத்தைக்
காட்டுவனவாகவே இருப்பினும், வேத நூலென்று பற்றிக் கொள்வர்.

     'வவ்வுவர்' என்பது, 'வவ்வர்' என இடைக்குறையாய் நின்றது.

            52
காவி வாட்டிய கண்மணிக் காதலே
யோவி வாட்டிய வுன்னுடல் புண்பட
வாவி வாட்டிய கோடையின் மானிட
ராவி வாட்டிய டும்பகை செய்வரோ.
 
"காவி வாட்டிய கண் மணிக் காதலே,
ஓவி வாட்டிய உன் உடல் புண் பட,
வாவி வாட்டிய கோடையின், மானிடர்
ஆவி வாட்டி அடும் பகை செய்வரோ?

     "கருங்குவளை மலரை வாட்டிய கண்மணி கொண்ட என் அன்பே,
வருந்தி வாட்டிய உன் உடல் முழுதும் புண்பட்ட பின்னரும், தடாகத்தை
வற்றி வாடச் செய்த கோடை போல, மானிடர் உன் உயிரையே
வாட்டிக்கொல்லும் அளவிற்கு உன் மீது பகை கொள்வரோ?