பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்327

நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற
புண்ணிய மரபோர், உட் புலன் அயர்வு இலர்
                               போன்றே,
மண்ணிய வனம் நீங்கி, வசி குடி உறை கானம்
கண்ணிய நெறி போகக் கண்டு, அழுதன காவே.

     தம்மிடம் பொருந்தியிருந்த சிறிதளவான பொருளையும் விட்டு
நீக்கி, வறுமையை வரவேற்றுக் கொண்ட புண்ணிய இயல்புடையோர்
மூவரும், வெளியே மட்டுமின்றி உட்புலனாகிய உணர்விலும் சோர்வு
இல்லாதவர் போன்று, அழகு செய்யப்பட்டது போன்ற சோலையை நீங்கி,
நெருப்பு நிலையாகக் குடி கொண்டு தங்கும் பாலைவனத்தை நோக்கிய
வழியில் போகக் கண்டு, அச்சோலையின் இடங்களெல்லாம் அழுதன.

                 5
பூவிடை யழவண்டு பொதும்பிடை யழமஞ்ஞை
காவிடை யழவம்பூக் கடிமலர் தவழ்யாறு
தாவிடை யழவந்தோ தகாதென வழயாவுங்
கோவிடை யரசாள்வோர் கொடுவன மருகுற்றார்.
 
பூஇடை அழவண்டு, பொதும்பிடை அழ மஞ்ஞை,
காஇடை அழ அம்பூ, கடி மலர் தவழ் யாறு
தாவு இடை அழ, 'அந்தோ, தகாது! ' என
                            அழ யாவும்,
கோ இடை அரசு ஆள்வோர் கொடு வனம்
                            அருகு உற்றார்.

    பூக்களில் அமர்ந்து வண்டுகள் அழவும், பொந்துகளில் நின்று
மயில்கள் அழவும், சோலையில் மலர்ந்த அழகிய பூக்கள் அழவும்,
மணமுள்ள மலர்கள் தன் மேல் தவழச் செல்லும் ஆறு தன்
பாய்ச்சலிடையே இரைந்து அழவும், 'ஐயோ! இவர்கட்கு இது தகாது!'
என்று எல்லாமே அழவுமாக, வானத்தில் அரசாள்வோராகிய
அம்மூவரும் கொடிய பாலைவனத்தின் அருகே சென்று சேர்ந்தனர்.

                கொடிய பாலை குளிர்ந்த காட்சி

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                    6
மேற்சபை யாக வானோர் விருப்பெழீஇ மருங்கிற் சூழ
நூற்சபை யாகக் கற்றோர் நுதலிய புகழின் மிக்கோர்
கோற்சபை யாக மூவர் கொடுந்துயர் குடியாய் வைகும்
பேற்சபை யென்னுங் கானம் பெற்றுளந் தளரா புக்கார்.