பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்33

                                                     23
உடைக்கலத் திலங்கிச் செற்றத் துடன்றிருள் பருகு நெஞ்சா
னடைக்கலத் தடைந்த யூதர்க் கடிமையென் றியற்றும் பீழை
துடைக்கலற் றெவரு மெஞ்சித் தொறுந்தொறு மழுத                                       கண்ணீர்
படைக்கலத் தகுதி போலப் பைதிரஞ் சிதைத்த தன்றே.
 
"உடைக் கலத்து இலங்கி, செற்றத்து உடன்று இருள் பருகு
                                           நெஞ்சான்,
அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை
துடைக்கல் அற்று, எவரும் எஞ்சி, தொறும் தொறும் அழுத
                                           கண்ணீர்,
படைக்கலத் தகுதி போலப் பைதிரம் சிதைத்தது அன்றே.

     "தான் அணிந்துகொண்ட அணியால் ஒளிர்ந்து, பிடிவாதத்தால்
பதைத்து இருளைப் பருகும் நெஞ்சு கொண்ட அவன், தன் நாட்டில்
அடைக்கலமென்று வந்தடைந்த யூதருக்கு அடிமை என்ற தன்மையாய்ச்
செய்யும் துன்பத்தைத் துடைக்க ஆள் அற்று, அவ்யூதர் யாவரும் மெலிந்து,
இடம் தோறும் இடம் தோறும் நின்று அழுத கண்ணீர், படைக்கருவியின்
தன்மை போல அந்நாட்டைச் சீரழித்தது.

     'அன்றே' அசைநிலை,

     "அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே,
      செல்வத்தைத் தேய்க்கும் படை"           
     
                               என்பது குறள் (555)

                      24
நொந்துநொந் தழுத வோதை நுழைந்துயர் வானத் துச்சி
வந்துவந் தருளின் மிக்கான் வருந்தினர்க் கிரங்கிக் குன்றின்
முந்துநின் றருண மேய்த்த மோயிசன் விளித்தோர் சூரல்
தந்துநின் குலங்கொல் கோன்கட் சடுதிதூ தேகு கென்றான்.
 
"நொந்து நொந்து அழுத ஓதை, நுழைந்து உயர் வானத்து உச்சி
வந்து வந்து, அருளின் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி, குன்றின்
முந்து நின்று அருணம் மேய்த்த மோயிசன் விளித்து, ஓர் சூரல்
தந்து, 'நின் குலம் கொல் கோன்கண் சடுதி தூது ஏகுக' என்றான்.