'போன்றே'
என்றவிடத்து, 'போன்றன' என்ற சொல் கடைக்குறையாய்,
'போன்று' என அமைந்தது.
10 |
போர்முகத்
தழன்ற வீரர் புகைந்தெனப் புகைந்த கான
மேர்முகத் தெழுந்த மூவ ரெய்திய வேலை தானுந்
தார்முகத் துவந்த மன்றற் றகும்புது மகளிர் போன்று
நீர்முகத் திவரன் பார்ந்த நெஞ்செனக் குளிர்ந்த தன்றே. |
|
போர் முகத்து
அழன்ற வீரர் புகைந்து எனப் புகைந்த கானம்,
ஏர் முகத்து எழுந்த மூவர் எய்திய வேலை, தானும்
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று,
நீர் முகத்து, இவர் அன்பு ஆர்ந்த நெஞ்சு என, குளிர்ந்தது
அன்றே. |
சினந்த வீரர்
போரிடத்துப் புகைந்த தன்மையாய் வெப்பத்தால்
புகைந்து நின்ற அப்பாலைவனம், அழகிய முகத்தோடு அங்கு எழுந்தருளிய
இம்மூவர் தன்னை வந்தடைந்தபோது திருமணத்திற்குத் தகுதிவாய்ந்து
மணமாலையைக் கண்டு மகிழ்ந்த புது மணமகளிர் போன்று, தானும்
நீர்ப்பசைப் பெற்று, இம் மூவர் தம் அன்பார்ந்த நெஞ்சம் போல் குளிர்ந்தது.
11 |
அயின்றெழும்
விரைவாய்த் தாழை யலர்மடற் பள்ளி பன்னாட்
டுயின்றெழு மிளநல் வேனில் துதித்தபங் குனியிற் செல்லக்
குயின்றெழுங் குயில்கள் காட்டக் கோதற மகிழ்பூங் காவிற்
பயின்றெழும் புகழின் மிக்கோர் பணிமுகத் துவந்த பாலை. |
|