பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்331

அயின்று எழும் விரை வாய்த் தாழை அலர் மடல் பள்ளி பல்
                                             நாள்
துயின்று எழும் இள வேனில், துதித்த பங்குனியில் செல்ல,
குயின்று எழும் குயில்கள் காட்ட, கோது அற மகிழ் பூங் காவின்,
பயின்று எழும் புகழின் மிக்கோர் பணி முகத்து, உவந்த பாலை.

     அக்குளிர்ச்சியைத் தானும் பருகி எழுச்சி கொள்ளும் மணம்
பொருந்திய தாழம்பூ மடலைப் படுக்கையாகக் கொண்டு உறங்கி எழும்
நல்ல இளவேனிற் பருவம், போற்றத்தக்க பங்குனி மாதத்தில் இயங்கிக்
கொண்டிருந்தது. அது கண்டு கூவிக் கொண்டு எழும் குயில்கள் அது
இளவேனிற் பருவமென்று காட்டின. அப்பொழுது, பழக்கமாகப் புலவர்
வாயினின்று எழும் புகழையெல்லாம் மிஞ்சிய அம்மூவர்தம் ஏவலின்
முகத்தே, குற்றமற மகிழ்ந்த பூஞ்சோலைபோல, அப்பாலை நில
இடங்களெல்லாம் மகிழ்ந்தன.

     இளவேனிலுக்கு முந்திய கார், கூதிர், முன்பனி, பின்பனியெல்லாம்
வெயில் மிகுதியாக இராமையால், அக்காலமெல்லாம் வெயில் தாழம்பூ
மடலுக்குள்ளே துயின்று கொண்டிருந்ததாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
முதுவேனில் போலக் கொடுமையின்றி, இன்பம் தருவதாதலின்,
'இளநல்வேனில்' என்றார். அப்பருவத்திலும், பிந்திய சித்திரை போலாது,
முந்திய பங்குனி யாவரும் போற்றத்தக்கதாதலின், 'துதித்த பங்குனி'
என்றார்.

                     12
மைவ்வினை யழன்ற நெஞ்சின் மருவிய வருளின் மாட்சிச்
செவ்வினை புக்க பாலாற் றீதறச் சிறந்த தன்மைத்
தவ்வினை செகுத்த மூவ ரணிமுகத் தருளினாலே
வெவ்வினை யுடன்ற கானம் விரைமுகத் துவந்த தன்றோ.
 
மை வினை அழன்ற நெஞ்சில் மருவிய அருளின் மாட்சிச்
செவ் வினை பக்க பாலால் தீது அறச் சிறந்த தன்மைத்து,
அவ் வினை செகுத்த மூவர் அணி முகத்து அருளினாலே
வெவ் வினை உடன்ற கானம் விரை முகத்து உவந்தது அன்றோ.