இருண்ட
பாவச் செயலால் கொதித்துக் கிடந்த நெஞ்சில் வந்து
பொருந்திய தெய்வ அருளின் மாண்பினால் செவ்விய நல்வினை புகுந்த
காரணத்தால் தீது நீங்கிச் சிறந்த தன்மை போல, அப்பாவ வினையை
அழித்த இம் மூவரின் அழகிய முகத்தினின்று பொழிந்த அருளினாலே
வெப்பத்தைத் தரும் செயலில் சினந்து நின்ற அப்பாலைவனம் மணம்
பொழியும் மலர் முகத்தாடு மகிழ்ந்து நின்றது.
13 |
நிறைமல
ரொ ழுக்கத் தாட்கீழ் நித்திலப் பரப்பிற் றூய
நறைமலர் பரப்பி னாற்போ னளிர்பட வொழுகிச் சூழ
வுறைமலர் மணவாய்த் தென்ற லுரைத்தமங் கலத்தின் வீச
மறைமலர் பூண்ட மார்பர் மகிழ்வலர் மனத்திற் போனார். |
|
நிறை மலர் ஒழுக்கத்
தாள் கீழ், நித்திலப் பரப்பில் தூய
நறை மலர் பரப்பினாற் போல், நளிர்பட ஒழுகி, சூழ
உறை மலர் மணவாய்த் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர் மனத்தின் போனார். |
முத்துக்களைப்
பரப்பிய இடத்தின்மேல் தூய மணமுள்ள மலர்களைப்
பரப்பினாற்போல், நிறைவாக மலர்ந்த ஒழுக்கம் பூண்ட அம்மூவர் அடியின்
கீழ், அப்பாலை நிலம் குளிர்ச்சிப் பொருந்த அமைந்தும், சுற்றிலுமுள்ள
மலர்களின் மணத்தைத் தன்னிடத்துக் கொண்ட தென்றல் மங்கலம் கூறிய
தன்மையாக வீசவுமாக, வேதத்தை மலர் மாலையாக அணிந்த மார்பு
கொண்ட அம்மூவரும் மகிழ்ச்சிப் பொங்கும் மனத்தோடு நடந்து போயினர்.
14 |
மின்னிறக்
கொடியைச் சூட்டி விளங்கிய மணியின் வில்செய்
நன்னிறத் தாரம் பூண்டு நாடிவந் தணியிற் றோன்றுஞ்
சென்னிறக் குடையிற் கொன்ற செழித்தசெங் கதிரின் வெப்பத்
தின்னிறக் குளிர்பூ நீழ லியங்கிய சிறப்பிற் போனார். |
|
மின் நிறக்
கொடியைச் சூட்டி, விளங்கிய மணியின் வில் செய்
நல் நிறத்து ஆரம் பூண்டு, நாடிவந்து அணியின் தோன்றும்
செல் நிறக் குடையின் கொன்ற, செழித்த செங்கதிரின் வெப்பத்து
இன் நிறக் குளிர் பூ நீழல் இயங்கிய சிறப்பின் போனார். |
|