பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்333

     மின்னலென்னும் அழகிய கொடியை மேலே சூட்டி, விளங்கிய
மணிகளைப் போன்ற வான வில்லாலாகிய நல்ல நிறமுள்ளமாலையை
அணிந்து தம்மை நாடிவந்து அணியணியாகத் தோன்றும் மேகமென்னும்
நிறக் குடையினால் மறைக்கப்பட்டும் செழித்து நின்ற பகலவன்
வெப்பத்தின் நடுவே தோன்றிய இனிய அழகிய குளிர்ந்த மெல்லிய
நிழலில் இயங்குதலாகிய சிறப்போடு அவர்கள் சென்றனர்.

                      15
பாகிளஞ் சுவைபெய் வில்லார் பவளவாய்த் துறையில்
                                      வைத்த
நாகிளந் தரளங் காட்டி நகைதரு மடந்தை போல
வாகிளம் பனிப்பூங் கானத் தழகணி செய்தா லென்ன
வாகிளஞ் சுடர்செய் மேனி வானவர் காட்டி நின்றார்.
 
பாகு இளஞ் சுவை பெய் வில் ஆர் பவள வாய்த் துறையில்
                                         வைத்த
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல,
ஆகு இளம் பனிப் பூங் கானத்து, அழகு அணி செய்தால்
                                         என்ன,
வாகு இளஞ் சுடர் செய் மேனி வானவர் காட்டி நின்றார்.

     வெல்லப் பாகின் இளஞ் சுவை பெய்து வைத்ததும் ஒளி நிறைந்த
பவளம் போன்றதுமாகிய தன் வாயாகிய துறையில் இட்டுவைத்த,
சங்கிடத்துப் பிறந்த இளமுத்துப் போன்ற பற்களைக் காட்டிப் புன்முறுவல்
செய்யும் மங்கைபோல, அங்குப் பாலையினின்று உண்டாகிய இளம்
பனிபோல் குளிர்ந்த பூஞ்சோலையில், அழகுக்கு அழகு செய்தாற்போல,
அழகு நின்று இளங் கதிர் பரப்பும் மேனியை வானவர் காட்டி நின்றனர்.

                    16
ஈரெழு வகுப்பிற் றேர்ந்த வினமணி நல்யாழ் வாங்கி
யோரெழு குரலி னோதை யுரிக்கிளை தளிர்ப்பப் பாகின்
னேரெழு மிடற்றி னோதை நெறிகள்மூன் றியக்கிக் கூட்டிப்
பாரெழு நடங்கள் வாட்டப் பாடினர் சிறப்பின் வானோர்.
 
ஈர் எழு வகுப்பின் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி,
ஓர் எழு குரலின் ஓதை உரிக் கிளை தளிர்ப்ப, பாகின்
நேர் எழு மிடற்றின் ஓதை நெறிகள் மூன்று இயக்கி, கூட்டி,
பார் எழு நடங்கள் வாட்டப் பாடினர் சிறப்பின், வானோர்.