பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்335

                   சூசையின் போற்றிப் பாடல்

          வெண்டளை, வெண்டளை, வெண்டளை, வெண்டளை

                 18
பாலையின் வெப்பம் பனிமருதத் தாக்கினையே
மாலையின் தாமத் தருணீதி வல்லோ
யருணீதி வல்லோ னடிசென்றா ரிங்கண்
டெருணீதி நீங்காதார் தீதிடும்மை நண்ணாரே.
 
"பாலையின் வெப்பம் பணி மருதத்து ஆக்கினையே,
மாலையின் தாமத்து அருள் நீதி வல்லோய் !
அருள் நீதி வல்லோன் அடி சென்றார், இங்கண்,
தெருள் நீதி நீங்காதார், தீது இடும்பை நண்ணாரே.

     "மாலையின் ஒழுங்கு போல அருளும் நீதியும் வல்லமையும்
கொண்ட ஆண்டவனே, நீ பாலை நிலத்தின் வெப்பத்தைக் குளிர்ந்த
மருத நிலத்துக்கு ஒப்பாக மாற்றினாய்! அருளும் நீதியும் வல்லமையும்
கொண்ட இவ்வாண்டவன் அடியைச் சார்ந்தவர், தெளிந்த நீதி
நீங்காதவராய், இவ்வுலகில் தீமையும் துன்பமும் அடைய மாட்டார்.

                  19
வீங்கோத நீர்நிலையாம் வெய்யநஞ் சின்னமுதா
மீங்கோத வொப்பிறந்த வெந்தை யடிசென்றா
லெந்தை யடிசென்றா ரெங்குமிடர் மொய்த்துலவச்
சிந்தை மகிழத்தாம் தீதிடும்பை நண்ணாரே.
 
"வீங்கு ஓத நீர் நிலை ஆம், வெய்ய நஞ்சு இன் அமுது                                       ஆம்,
ஈங்கு ஓத ஒப்பு இறந்த எந்தை அடி சென்றால்!
எந்தை அடி சென்றார், எங்கும் இடர் மொய்ந்து உலவ,
சிந்தை மகிழ, தாம், தீது இடும்பை நண்ணாரே.

     "இவ்வுலகில் தனக்கு நிகராகக் கூறுதற்கு உவமையே இல்லாது
கடந்து நின்ற எம் தந்தையாகிய ஆண்டவனின் திருவடியைச்
சரணென்று அடைந்தால், பொங்கி எழுந்த கடல் நீரும் நிலை கொண்டு
நிற்கத் தக்கதாகும்; கொடிய நஞ்சும் இனிய அமுதமாகும்! எங்கும்
துன்பம் திரண்டு உலவிக் கொண்டிருக்க, எம் தந்தையாகிய ஆண்டவனின்
திருவடியைச் சரணென்று அடைந்தவர் மட்டும் மன மகிழ்ச்சிக் கொண்டு,
தீமையும் துன்பமும் அடையார்.