பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்336

               20
வான்வா ழமரர் வணங்கித் தலையேற்றுந்
தேன்வா ழடிசென்றார் தீதிடும்பை நண்ணாரே
தீதிடும்பை நண்ணுவரிச் சீறடியை நாடாதால்
வாதிடும்பை வாழ்க்கை வழுக்கிவறுந் தீயோரே.
 
"வான் வாழ் அமரர் வணங்கித் தலை ஏற்றும்
தேன் வாழ் அடி சென்றார் தீது இடும்பை நண்ணாரே.
தீது இடும்பை நண்ணுவர், இச்சீறடியை நாடாதால்,
வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே."

     "வானுலகில் வாழும் வானவர் வணங்கித் தம் தலைமேல் ஏற்றிப்
போற்றும் தேன் வாழும் மலர் போன்ற இத்திருவடியைச் சரணனென்று
சென்றடைந்தோர் தீமையும் துன்பமும் அடைய மாட்டார். வாதும்
துன்பமும் நிறைந்த இவ்வுலக வாழக்கையில் தவறான இன்பங்கள் மீது
ஆசை வைக்கும் தீயோரோ, இச் சிறிய அடிகளைத் துணையாக
நாடாமையால், தீமையும் துன்பமுமே அடைவர்."

     சீறடி - சிறுமை + அடி; சிறு + அடி; சீறு + அடி; சீறடி.

                   வானவர் படைத்த விருந்து

     - விளம், கருவிளம், கருவிளம், - மா, தேமா

                        21
ஏழிசைக் குழலினோ டினியபண் டொனியினோ டிசைவி டாத
யாழிசைக் கிவையெலா மிணர்நறுங் கொடியினோ னறைய நாதன்
கேழிசைத் தொளிறுதாள் கெழுவவம் பலர்நறா மழையை வாரிச்
சூழிசைத் திடையுலாந் தொகையிழந் தமரரே தொழுது போனார்.
 
ஏழ் இசைக் குழலினோடு இனிய பண் தொனியினோடு இசை விடாத
யாழ் இசைக்கு, இவை எலாம் இணர் நறுங் கொடியினோன் அறைய,
                                                நாதன்
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை
                                                வாரிச்
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது
                                                போனார்.