ஏழு
இசைக்கு உரிய குழலோசையோடும் இனிய பாடலின்
ஓசையோடும் இசைவு கெடாத யாழின் இசைக்குப் பொருந்த பூங்கொத்தின்
நறுமணம் கொண்ட கொடியைத் தாங்கிய சூசை இவையெல்லாம் கூறினான்.
குழந்தை நாதனின் நிறத்தோடு இசைந்து ஒளிரும் அடிகளில் நிறைய மணம்
பொருந்திய மலர்களின் தேனாகிய மழையை வாரிச் சூழ நின்று இசையோடு
பொழிந்து, இடையே உலாவும் தம் தொகைக்குக் கணக்கின்றித்
தொழுதவண்ணம் வானவர் சென்றனர்.
22 |
இன்னவாய்
மருதமொத் திணர்நறா வுமிழ்வனத் திவர்கள் பன்னாட்
டுன்னவா னுலகினிற் றுறுவினா ரனையவுட் சுவையின் விள்ளா
வுன்னவாய் மகிழ்வுதுய்த் துணவுணா நினைவுமற் றொழுகி யோர்நா
ளன்னவா யமரருற் றணுகிவா னுரிவிருந் தமைதல் செய்தார். |
|
இன்னவாய், மருதம்
ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள்
பல் நாள்
துன்ன, வானுலகில் துறுவினார் அனைய உட் சுவையின் விள்ளா,
உன்ன வாய் மகிழ்வு துய்த்து, உணவு உணா நினைவும் அற்று
ஒழுகி, ஓர் நாள்
அன்ன வாய் அமரர் உற்று அணுகி, வான் உரி விருந்து அமைதல்
செய்வார். |
இவ்வாறாக, மருத
நிலம் போன்று பூங்கொத்துகள் தேனை உமிழும்
அவ்வனத்தில் இவர்கள் பல நாட்களாகச் சென்றிருந்தும், வானுலகிற்
சென்றடைந்தவர் போல உள்ளத்துக் கொள்ளும் சுவை நீங்கப் பெறாமல்,
தம் மனத்தையே வாயாகக் கொண்டு மகிழ்ச்சியையே உணவாக உண்டு,
உணவு உண்ணாத நினைவும் அற்றவராய் நடந்து போகையில், ஒருநாள்
அவ்விடத்தே வானவர் வந்தணுகி, வானுலகிற்கு உரிய விருந்தை அமைத்து
நின்றனர்.
23 |
கொழுநிலா
மரகதக் கொடியின்மேன் மணிகள்பூத் தயரு பந்தர்
விழுநிலர விளையுமுத் தனையமீன் விரிவுசெய் விரிவி தானத்
தெழுநிலா மணிநிரை தெழினிவீழ்த் திணர்நறா வமளி பாய்த்திச்
செழுநிலா மணிமுகத் திருவினோ ரமளியிற் பொலிய நின்றார். |
|