பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்338

கொழு நிலா மரகதக் கொடியின் மேல் மணிகள் பூத்து அயரு
                                       பந்தர்,
விழு நிலா விளையும் முத்து அனைய மீன் விரிவு செய் விரி
                                       விதானத்து,
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து, இணர் நறா அமளி
                                       பாய்த்தி,
செழு நிலா மணிமுகத் திருவினோர் அமளியில் பொலிய நின்றார்.

     கொழுமையான ஒளி பொருந்திய மரகதக் கொடியின்மேல் பலவகை
மணிகளே மலராய்ப் பூத்து விளங்கும் பந்தலில், சிறந்த ஒளி விளையும்
முத்து போன்ற விண்மீன்கள் பரந்து கிடக்கும் விரிவான மேற்கட்டி
அமைத்து, எழுந்து பரவும் ஒளி கொண்ட இரத்தினங்களை வரிசையாகப்
பதித்த திரைச் சீலையைத் தொங்க விட்டு, தேனுள்ள பூங்கொத்துக்களினால்
மெத்தை பரப்பி, செழுமையான நிலவு போன்ற அழகிய முகங் கொண்ட
செல்வராகிய அம்மூவரும் அம்மெத்தையின் மேல் அமர்ந்து பொலிவுடன்
விளங்கினர்.

                    24
விற்கலத் துருநிலா விலகவிட் டமரர்சூழ் வியவ ராகப்
பொற்கலத் தலர்நறாப் புனலுமுய்த் தகிலலர் புகையு மாட்டிப்
பற்கலத் தமிர்தமே பலசுவைக் கமையவா னவர்ப ரப்பிச்
சொற்கலத் திணையிலாச் சுவையிலத் தகவினோர் துதியொ
                                         டுண்டார்.
 
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக,
பொன் கலத்து அலர் நறாப் புனலும் உய்த்து, அகில் அலர்
                               புகையும் ஆட்டி,
பல் கலத்து அமிர்தமே பல சுவைக்கு அமைய வானவர் பரப்பி,
சொல் கலத்து இணை இலாச் சுவையில் அத்தகவினோர்
                               துதியொடு உண்டார்.

     தாம் அணிந்திருந்த ஒளியுள்ள அணிகலன்களோடு தம் உருவ
ஒளியையும் இலங்கவிட்டு வானவர் சுற்றிலும் ஏவலராக நின்று,
பொற்கலங்களில் தாங்கிய மலர் மணம் கொண்ட பன்னீர் தெளித்து,
அகிற் கட்டை வெந்து பரந்த புகையும் காட்டி, பல பாத்திரங்களில்
உணவைப்