பல்வேறு சுவைக்குப்
பொருந்த வானவரே நின்று பரப்பி வைக்கவே,
சொல் என்னும் அணிகலனால் இணை சொல்ல இயலாத சுவையோடு,
தகுதி வாய்ந்த அம்மூவரும் ஆண்டவனைத் துதித்து அதனை உண்டனர்.
25 |
சால்வருந்
தயையுணர்ந் தினிதுணும் பொழுதருந் தகுதி வானோர்
கால்வருங் கவரியுங் கமழ்வரும் புகையையுங் கனிய வாரி
நால்வருங் கலநரம் பிசைநயந் தெழநறா நளின வாயாற்
பால்வருஞ் சுவைவரும் பலநரம் பிசையொடும் பாடி னாரே. |
|
சால் வரும் தயை
உணர்ந்து இனிது உணும் பொழுது, அருந் தகுதி வானோர்
கால் வரும் கவரியும் கமழ் வரும் புகையையும் கனிய வாரி,
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ, நறா நளின வாயால்
பால் வரும் சுவை வரும் பல நரம்பு இசையொடும் பாடினாரே. |
தம்பால் ஆண்டவன்
மிகுதியாகக் கொண்டுள்ள தயவை உணர்ந்து
அவ்விருவரும் இனிது உண்ணும்பொழுது, அரிய தகுதி கொண்ட வானோர்
சிலர் காற்று வருவதற்கான சாமரையும் மணம் வருவதற்கான புகையையும்
கனிவோடு வாரிப் பொழியவும், வேறு சிலர் நாலு வகையாகக் கூறப்படும்
யாழ்களின் நரம்பிற் பிறக்கும் இசையை விருப்பத்தோடு எழுப்பவும்
மற்றும் சிலர் தேனுள்ள தாமரை மலர் போன்ற தம் வாயால் பாலினின்று
பிறக்கும் சுவைக்கு ஒப்பான பல நரம்பு கொண்ட யாழின் இசைக்குப்
பொருந்தப் பின்வருமாறு பாடலாயினர் :
அவ்வானவர்
பாடிய பாடல் எலீய முனிவன் வரலாறு. இது பற்றிய
செய்திகள் ப. ஏ., I, அரசர், அதிகாரங்கள் 17 தொடங்கி இடையிட்டுக்
காண்க. நால்வகை யாழ்: பேரியாழ், சகோட யாழ், மகரயாழ்,
செங்கோட்டியாழ்.
|