பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்341

                     27
கான்வாழ் சுவைத்தேன் றுளிநக்கிக் கதிவாழ் மாறா
                                    வாழ்வொழிந்து
வான்வா ழிறையோன் றனைமறுத்து வசைப்பற் றேவர்த்
                                    தொழக்கண்டு
தேன்வாழ் காவு மன்னுயிருந் தேம்பி வாட முவ்வருடந்
தான்வா ழுறைகொள் முகின்முகமுந் தகைத்த சாப மாமுனியே.
 
"கான் வாழ் சுவைத் தேன் துளி நக்கி, கதி வாழ் மாறா
                                          வாழ்வு ஒழிந்து,
வான் வாழ் இறையோன் தனை மறுத்து, வசைப் பல் தேவர்த்
                                          தொழக் கண்டு,
தேன் வாழ் காவும் மன் உயிரும் தேம்பி வாட, முவ்வருடம்,
தான், வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மாமுனியே.

     "காட்டில் உள்ள சுவையான தேன் துளி போன்ற இவ்வுலக
இன்பங்களையே நக்கி உண்டு, மோட்ச கதியில் வாழும் மாறாத வாழ்வு
பற்றிய எண்ணமும் ஒழிந்து, வானுலகில் வாழும் மெய்யான ஆண்டவனை
மறுத்து, இகழ்ச்சிக்குரிய பற்பல தேவர்களை அந்நாட்டவர் தொழக்கண்டு,
தேன் கொண்ட சோலைகளும் நிலைபெற்ற உயிர்களும் மெலிந்து வாடுமாறு,
மூன்று ஆண்டளவாய், வாழ்விற்குக் காரணமான துளியைத் தன்னிடத்தே
கொண்டுள்ள மேகம் தன் முகத்தையும் காட்டாதவாறு தடுத்த சாபத்தில்
வல்ல பெரு முனிவனும் தானே ஆவான்.

                       28
அந்நா ளெல்லாந் தானுழைவா யசல முழையுட் புக்குறைந்த
பன்னா ளெல்லா முறைதவிரா பறந்தோர் காக முணவுய்ப்ப
முன்னா ளில்லா வரத்துயாந்து முதல்வ னடிசேர்ந் தானென்ன
எந்நா ளெல்லாங் கோடாத வியல்பிற் சீல மாமுனியே.
 
"அந் நாள் எல்லாம், தான் நுழை வாய் அசல முழையுள்
                                   புக்கு உறைந்த
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம்
                                   உணவு உய்ப்ப,
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து, முதல்வன் அடி
                                   சேர்ந்தான் என்ன,
எந் நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மாமுனியே.