"அந்தக்
காலமெல்லாம், தான் நுழைந்தே செல்வதற்குரிய ஒரு
மலைக் குகைக்குள் புகுந்து தங்கினான். அந்நாட்களிலெல்லாம் முறை
தவறாமல் பறந்து வந்து ஒரு காகம் உணவு கொணர்ந்தது, அப்பொழுது
முன் நாட்களில் தான் பெற்றிராத வரங்களில் உயர்ந்து, ஆண்டவன்
திருவடியைச் சென்று சேர்ந்தவன் போல, எந்நாளும் எல்லாம் தவறாத
இயல்போடு தவவொழுக்கம் மேற்கொண்டு நின்ற பெருமுனிவன் ஆவான்
அவன்.
29 |
பிழையிற்
கொடுங்கோன் றுறவரெலாம் பின்றாச் சினத்துக்
கொன்றபினர்
முழையிற் கிடந்த விம்முனியு முரிக்கக் கொணர்மி னெனவிட்ட
வுழையி லொருமூ வைம்பதுவே லுழவ ரொருங்கும்
வாய்மொழியான்
மழையிற் கனலை வான்பொழிய வைதென் றெரித்த மாமுனியே. |
|
"பிழையின் கொடுங்
கோன் துறவர் எலாம் பின்றாச் சினத்துக் கொன்ற
பினர்.
'முழையின் கிடந்த இம்முனியும் முரிக்கக் கொணர்மின்! ' எனவிட்ட
உழையில், ஒரு மூ ஐம்பது வேல் உழவர் ஒருங்கும் வாய் மொழியால்,
மழையின் கனலை வான் பொழிய! ' வைது என்று எரித்த மாமுனியே. |
"பிழை மிக்க
கொடிய மன்னன், மழை பெய்விக்கத் தவறியமையால்,
தன் நாட்டிலுள்ள துறவியரை எல்லாம் நீங்காத சினத்தோடு கொன்ற பின்,
'குகைக்குள் அடைந்து கிடந்த இவ்வெலீய முனிவனையும் கொல்வதற்குக்
கொணர்வீர்! ' என்று ஏவி விட்டபோது, அவ்வாறு வந்த நூற்றைம்பது வேல்
வீரரையும் ஒருங்கே தன் வாய் மொழியால், 'வானம் நெருப்பை மழைபோல்
பொழிக! ' என்று சாபமிட்டு எரித்த மாமுனிவன் ஆவான்.
'வைது
என்று' என்பதனை, 'என்று வைது' என மாற்றிக் கூட்டுக.
|