பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்343

                    30
கொழுகொம் பிழந்த கொடியன்ன கொழுந னிழந்த
                                     விளங்கைமை
செழுகொம் பன்ன வூன்றுதற்குத் திதியி னின்ற வோர்மகனும்
விழுகொம் பன்ன வீழ்ந்திறந்து விம்மி யழுந்தாய் நனியுவப்ப
வெழுகொம் பன்ன வம்மகனை யெழுப்பித் தந்த மாமுனியே.
 
"கொழு கொம்பு இழந்த கொடி அன்ன, கொழுநன் இழந்த இளங்
                                            கைமை
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்குத் திதியின் நின்ற ஓர் மகனும்
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து, விம்மி அழும் தாய் நனி
                                            உவப்ப
எழு கொம்பு அன்ன, அம்மகனை எழுப்பித் தந்த மாமுனியே.

     "கொழு கொம்பை இழந்த கொடி போலத் தன் கணவனை இழந்த
ஓர் இளம் கைம்பெண், செழுமையான கொம்பு போல் தான் ஊன்றி
நடப்பதற்கு உறுதி நிலை போல நின்ற ஒரே மகனும் விழுந்த கொம்புபோல்
நோயில் விழுந்து இறக்கக் கண்டு விம்மி அழுதாள். அத்தாய் மிகவே
மகிழுமாறு, முளைத்தெழுந்த கொம்பு போல் அம்மகனை எழுப்பித் தந்த
மாமுனிவனும் இவனே ஆவான்.

     செழுகொம்பு - செழுமை + கொம்பு : 'செழுங் கொம்பு' எனற்பாலது,
செய்யுளோசை கருதி, 'செழு கொம்பு' என நின்றது தொகுத்தல் விகாரம்.
ஒரு சொல்லுள் வரும் குறையே குறைதல் விகாரம் எனவும், இருசொற்
புணர்ச்சியிடையே வரும் குறையெல்லாம் தொகுத்தல் விகாரம் எனவும்
வேறுபாடு நுனித்து உணர்க.

                     31
வலம்புங் கவனி மாமகடன் மருங்குல் மணிநீண் மேகலையோ
சிலம்பும் பசிய பொற்சிலம்போ சிறந்த சோர்தா னதிசேர்ந்து
புலம்புந் திரையைக் கம்பளத்தாற் புடைப்ப வரிதிற்
                                     பிரித்துநளிர்ந்
தலம்புந் திரையி லடிதோயா தப்பாற் கடந்த மாமுனியே.