திங்கள் தேர்
போலவும் தோன்றி, வானத்தினின்று இறங்கி வந்த ஒரு
தேரில் ஏறி, எவ்விடத்திருந்தும் எல்லாப் பொருள்களும் அணுக இயலாத
ஓர் இடத்தில் சென்று சேர்ந்த மாமுனிவனும் தானே ஆவான்.
அணுகாத + ஓர்
- 'அணுகாதவோர்' என வரற்பாலது, 'அணுகாதோர்'
என நின்றது தொகுத்தல் விகாரம்.
33 |
இன்னு மிந்நா
டன்னுயிரீ றின்றி யின்பக் கடனின்றோன்
பின்னு மிறைவன் றனிற்குணித்த பின்னா டனிலிவ் வுலகெரிந்து
மன்னு முயிரோ டுகமுடிதல் வருங்கா லக்கால் மீட்டொளியான்
மின்னு முருவோ டிவ்வுலகில் விளங்கத் தோன்று மாமுனியே. |
|
"இன்னும் இந்
நாள் தன் உயிர் ஈறு இன்றி இன்பக் கடல் நின்றோன்,
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள் தனில் இவ் உலகு
எரிந்து,
மன்னும் உயிரோடு உக முடிதல் வருங் கால், அக் கால் மீட்டு,
ஒளியால்
மின்னும் உருவோடு, இவ் உலகில் விளங்கத் தோன்றும், மாமுனியே. |
"இன்னும் இந்நாள்
வரைக்கும் தன் உயிருக்கு முடிவு இல்லாமல்
இன்பக்கடலில் நிலைபெற்றுள்ள இப்பெரு முனிவனே, பின்னும்
ஆண்டவன் தனக்குள் கருதிவைத்துள்ள பிற்காலத்தில், இவ்வுலகமும்
எரிந்து, நிலைபெற்ற உயிர்களோடு உலக முடிவும் வரும் பொழுது,
ஒளியால் மின்னும் உருவத்தோடு, மீண்டும் அக்காலத்தில் இவ்வுலகில்
விளங்க வந்து தோன்றுவான்.
34 |
ஒல்காத்
தவத்தின் வரத்தொகையோ னொருநாள் சுடுமிவ் வனத்திடையே
செல்காற் றளர்ந்தோர் வானவனுஞ் சென்று தந்த வடையருந்தி
யல்காத் திறத்து நாற்பதுநா ளருந்தா பசியா நெடுநெறிபோய்
நல்காத் திருநல் கியமலைவா னண்ணி முகிறோய் முடிசேர்ந்தான்.
|
|