பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்346

"ஒல்காத் தவத்தின் வரத் தொகையோன் ஒரு நாள் சுடும்
                                     இவ்வனத்திடையே
செல்கால், தளர்ந்து, ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி,
அல்காத் திறத்து நாற்பது நாள், அருந்தா, பசியா, நெடு நெறிபோய்,
நல்காத் திரு நல்கிய மலை, வான் நண்ணி முகில் தோய் முடி
                                     சேர்ந்தான்.

     "தளராத தவத்தால் வரங்களைத் தொகையாகக் கொண்டுள்ள
அவ்வெலீயன் முன் ஒரு நாள் சுடும் இப்பாலைவனத் திடையே
செல்லுங்கால், பசியால் தளர்ந்து, ஒரு வானவன் வந்து தந்த அடையை
அருந்தி, குறையாத திறத்தோடு நாற்பது நாட்களாய் வேறொன்றும்
அருந்தாமலும், பசிக்கு ஆளாகாமலும் நெடுவழிப் போய், கொடுத்தற்கரிய
செல்வமாகிய வேதத்தை ஆண்டவன் தந்தருளிய சீனயி மலையின்
வானத்தைத் தொட்டு மேகத்தோடு தோயும் உச்சியை அடைந்தான்.

                      35
எஞ்சாத் திறத்தை யம்முனிக்கன் றீந்தோ னீங்க
                                   ணின்றுமக்கே
துஞ்சாத் தயையின் வான்விரும்புஞ் சுவையிவ் விருந்தீந்
                                   தவன்யாரே
யஞ்சாத் திறத்தின் மூவுலகு மாண்டும் மிடத்து மகனாகி
விஞ்சாத் துதிமே னின்றதயை விளைக்கு மிவன்றா
                                   னெனத்தொழுதார்.
 
"எஞ்சாத் திறத்தை அம் முனிக்கு அன்று ஈந்தோன், ஈங்கண் இன்று
                                          உமக்கே
துஞ்சாத் தயையின் வான்விரும்பும் சுவை இவ் விருந்து ஈந்தவன்
                                          யாரே?
அஞ்சாத் திறத்தின் மூ உலகும் ஆண்டு, உம்மிடத்து மகன் ஆகி,
விஞ்சாத் துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான்!" எனத்
                                          தொழுதார்.

     "குறையாத இத் திறங்களையெல்லாம் அவ்வெலீய முனிவனுக்கு
அன்று தந்தவனும், இங்கு அன்று உமக்குமே தூங்காத தயவோடு
வானுலகம் விரும்பும் சுவை கொண்ட இவ்விருந்து தந்தவனும் யாரென்று
நினைக்கிறீர்கள்? எப்பகைக்கும் அஞ்ச வேண்டாத வல்லபத்தோடு மூன்று