பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்348

     முப்பந்தைந்து காத தூரம் சென்று, அதன்பின், கையில் எழுப்பிப்
பிடித்த சூலம் போல் பிரிவு கொண்ட மூன்று வழிகள், பொய் பலவிதமாய்ப்
பிரிந்து எழும் தன்மைபோல போதலைக் கண்டு தயங்கியபோது, மெய்க்குத்
துணையாக எழும் இயல்புள்ள மிக்கயேல் என்னும் வானவன் இவ்வாறு
சொல்லலுற்றான் :

     'அரோ' அசைநிலை, பின்வரும் பாடற்கும் இது பொருந்தும்.

             38
நீர்விளை மாரமு நிழல்செய் யோமையு
மேர்விளை முகத்திடங் கிடந்த விந்நெறி
பார்விளை வாழ்வெனப் பனிமு கத்தழற்
சூர்விளை கொடியதோர் சுரம தாமரோ.
 
"நீர் விளை மாரமும், நிழல்செய் ஓமையும்
ஏர் விளை முகத்து இடம் கிடந்த இந் நெறி,
பார் விளை வாழ்வு எனப் பனி முகத்து, அழல்
சூர் விளை கொடியது ஓர் சுரம் அது ஆம் அரோ.

     "நீருள்ள இடத்தில் தழைக்கும் கடம்பும், நிழலை மிகுதியாகத் தரும்
ஓமை மரமும் அழகு பொருந்திய முகத்தைக் காட்டி அழைப்பன போல்
இடப் பக்கமாய்க் கிடந்த இப் பாதை, இம்மண்ணுலகில் விளையும் வாழ்வு
போல், முதலில் குளிர்ந்த முகம் காட்டி, மேலே நெருப்புப் போல் துன்பம் விளைவிக்கும் கொடியதொரு பாலைவனத்துக் கொண்டு சேர்ப்பதாகும்.

     'மராம்' என்பது, செய்யுள் ஓசை பற்றி, 'மாரம்' எனத் திரிந்தது.

             39
வலம் படக் கிடந்தவவ் வழியு முன்னிலை
நலம்படக் காட்டிய சிறியர் நட்பென
வலம்படச் செலச்செல வஃகிக் கோறுமாத்
திலம்படப் புகுந்துகற் சிலம்பிற் செல்லுமால்.
 
"வலம் படக் கிடந்த அவ் வழியும், முன் நிலை
நலம் படக் காட்டிய சிறியர் நட்பு என,
அலம் படச் செலச் செல அஃகி, கோறு மாத்
திலம் படப் புகுந்து, கல் சிலம்பில் செல்லும் ஆல்.