பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்349

     "வலப் பக்கமாகக் கிடந்த அவ்வழியும், முதற்கண் நலமுடையதுபோல்
காட்டிக்கொள்ளும் அற்பர் நட்புபோல், முதலில் விரிவுபட்டுப் போகப்
போகக் குறுகி, கொல்லும் விலங்குகளைக் கொண்ட காட்டினுள் சென்று
புகுந்து, பின் கல் மலையில் சென்று முடியும்.

     'ஆல்' அசைநிலை. 'கோறல்' என்பது கொல் + தல் என்ற தொழிற்
பெயரின் விகார உருவம்; பகுதி 'கொல்', அதனைக் கோறு + அல் எனப்
பிரித்து, 'கோறு' என்பதே பகுதி போலக் கொண்டு, கோறுமா என
வினைத்தொகை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

                40
நிலத்திடத் தரசர்கை நீதிக் கோலென
வலத்திடத் தெங்கணும் வழுவி லாநடுப்
புலத்திடத் துறைவழி பொருள்பொய் யாமறை
நலத்திடத் தெசித்தினை நல்கு மாமென்றான்.
 
"நிலத்திடத்து அரசர் கை நீதிக் கோல் என,
வலத்து இடத்து எங்கணும் வழுவு இலா, நடுப்
புறத்திடத்து உறைவழி, பொருள் பொய்யா மறை
நலத்திடத்து, எசித்தினை நல்கும் ஆம்" என்றான்.

     "இவ்வுலகில் அரசர் கையில் தாங்கிய நீதியுள்ள செங்கோல் போல,
வலப்புறமோ இடப்புறமோ எங்கும் சாய்தல் இல்லாமல் நடுப் பக்கத்தில்
பொருந்திக் கிடக்கும் வழி, மெய்ப் பொருளில் பொய் புகுதல் இல்லாத
வேதத்தின் நலத்தைப்போல், எசித்து நாட்டை அடையத் தருவதாகும்"
என்றான்.

               41
செவ்வழி யுளத்தினோர் சிறந்து செவ்விய
வவ்வழி நடந்தொளி யரசன் றாழ்ந்துபோய்
மெய்வ்வழி யொளிதரச் சூழ்ந்த விண்ணவர்
மைவ்வழி யிராவொரு மரத்தொ டுங்கினார்.
 
செவ்வழி உளத்தினோர் சிறந்து, செவ்விய
அவ்வழி நடந்து, ஒளி அரசன் தாழ்ந்து போய்,
மெய் வழி ஒளி தரச்சூழந்த விண்ணவர்,
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார்.