பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்350

     செவ்விய நெறியிற் செல்லும் இயல்புடைய சூசையும் மரியாளும்
அதுகேட்டு மகிழ்ந்து, நேரியதான அந்நடுப்புறப் பாதையிலே நடந்து,
ஒளியரசனாகிய ஞாயிறு மறையவே, சூழ நின்ற வானவர் தம் உடல்
வழியாக ஒளி தந்து நிற்க, இருள் வழிந்தோடும் அவ்விரவுப்
பொழுதைக்கு ஒரு மரத்தடியில் தங்கினர்.

                   பாலை புகு படலம் முற்றும

               ஆகப் படலம் 19க்குப் பாடல்கள் 1799