பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்352

     ஊனுடல் கொண்ட ஆண்டவன் தம்மிடம் வருதலால், தாம்
அவனைப் போற்றி வணங்கியது போல், வானளாவிய மரங்கள் வளைத்த
தம் கிளை உச்சியில் தேன் சுவை பொருந்திய கனிகளும் தேன் நிறைந்த
மலர்களும் தாங்கி மணம் வழங்கிய ஒரு சோலையை அவர்கள் தம் எதிர்
கண்டனர்.


               3
பொற்கலத் தலர்முகை பொழிந்த வாசனை
தற்கலத் துயிர்த்தன தண்ணங் காலெதிர்
சொற்கலத் திமிழெழுந் தூது ரைத்தென
விற்கலத் தெழினலோர் விளிப்ப வீசியே.
 
பொன்கலத்து அலர்முகை பொழிந்த வாசனை
தன்கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர்
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என
வில் கலத்து எழில் நலோர் விளிப்ப வீசியே.

     பொற்கலம் போல மலர்ந்த மொட்டுப் பொழிந்த மணத்தைத்
தன்னிடத்துத் தோன்றியது போல் சுமந்து கொண்டு, குளிர்ந்த அழகிய
காற்று தன் சொல்லாகிய கலத்தில் இட்டு இன்பம் எழத் தக்க தூது
உரைத்த தன்மையாக, ஒளி பொருந்திய அணிகலன் போல் அழகு
வாய்ந்த அந்நல்லோரை அழைத்தாற்போல் எதிரே வீசியது.

     'வீசியே' என்ற விடத்து, 'வீசியது' என்ற சொல் இறுதி குறைந்து
நின்றது.

               4
தேரெழு மரசெனச் சிலைத்த தெண்டிரை
நீரெழும் பருதிதன் னெடுங்க திர்க்கணை
பாரெழு மிருட்கெதிர் பரப்பி யோட்டலிற்
காரெழு மிருளெலாங் கரந்த காவதே.
 
தேர் எழும் அரசு என, சிலைத்த தெண்திரை
நீர் எழும் பருதி தன் நெடுங் கதிர்க்கணை
பார் எழும் இருட்கு எதிர் பரப்பி ஓட்டலின்
கார் எழும் இருள் எலாம் கரந்த கா அதே.