பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்356

                   முனிவர் எதிர்கொள்ளல்

      - மா, - - காய், - மா, - மா, - - காய்.

                  11
பரவக் கதிர்வீசு முகத்திம் மூவர் படர்பூங்காக்
கரவக் கடிதேகக் கனிகள் கொய்தங் கண்டிரிந்த
குரவத் துகிற்குளித்த குரம்பை முனிவ ரெதிர்கொண்டு
விரவக் கனிவோங்க, விருந்தோம் பினர்போல்
                               விளம்புகின்றார்.
 
பரவக் கதிர் வீசு முகத்து இம்மூவர், படர் பூங் காக்
கரவக் கடிது ஏக, கனிகள் கொய்து அங்கண் திரிந்த
குரவத் துகில் குளித்த குரம்பை முனிவர் எதிர்கொண்டு,
விரவக் கனிவு ஓங்க, விருந்து ஓம்பினர் போல்,
                                  விளம்புகின்றார்.

     தம்மைச் சுற்றிலும் பரவுமாறு கதிர் வீசும் முகங்கொண்ட இம்மூவரும்,
படர்ந்த அப்பூஞ்சோலையில் மறைவாக விரைந்து செல்கையில், அங்குக்
கனிகளைக் கொய்து திரிந்த, பேரீச்சை இலையாற் செய்த ஆடையால் தம்
உடம்பைப் போர்த்திய முனிவர்கள் எதிர் கொண்டு வந்து, விருந்து
பேணுவார்போல், மிக்க கனிவு பொருந்த இவ்வாறு கூறுகின்றனர்,

                   12
மண்சே ரினஞ்சேரா வனத்திற் சேர்ந்த வான்வடிவீர்
விண்சே ரினந்தானோ மாக்கட் குலமோ விழைவோங்கிப்
பண்சே ரிசைப்பறவை பாடித் தவஞ்சேர் பதிசேர்ந்து
கண்சே ரணிகடந்த கவினீர் சொன்மின் வந்ததென்றார்.
 
"மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர்,
விண் சேர் இனம் தானோ? மாக்கள் குலமோ? விழைவு ஓங்கிப்
பண் சேர் இசைப்பறவை பாடு இத் தவம் சேர் பதி, சேர்ந்து,
கண் சேர் அணி கடந்த கவின் நீர், சொல்மின் வந்தது" என்றார்.

     "மண்ணுலகிலுள்ள மக்கள் இனம் வந்தடையாத இவ் வனத்தில் வந்து
சேர்ந்த வானுலகிற்குரிய வடிவம் கொண்டவர்களே, நீங்கள் வானுலகைச்
சேர்ந்த வானவர் இனத்தைச் சேர்த்தவர்தாமோ? மனித குலத்தவரோ?
அன்றியும், கண்ணுக்கு அமைந்த அழகெல்லாம் கடந்த அழகுள்ள நீங்கள்,