|
| 28 |
அஞ்சினா
னெனினுந் தேவ வருச்சனைக் கிடஞ்செய் யாத
நெஞ்சினான் கொடுமை யாற்ற நீரெரிக் கமலத் தன்னந்
துஞ்சி வாழ் பொய்கை போகிற் சொன்னவை மறுப்பா யாயி
னெஞ்சிலாத் துயரத் தாழ்வா யென்றுமோ யிசன்சொல் கின்றான். |
| |
"அஞ்சினான்
எனினும், தேவ அருச்சனைக்கு இடஞ்செய்யாத
நெஞ்சினான் கொடுமை ஆற்ற, நீர் எரிக் கமலத்து அன்னம்
துஞ்சி வாழ் பொய்கை போகில், 'சொன்னவை மறுப்பாய் ஆயின்,
எஞ்சு இலாத் துயரத்து ஆழ்வாய்!' என்று, மோயிசன், சொல்கின்றான். |
"அவ்வாறு
அஞ்சினான் எனினும், அதன் மூலம் யூதரின் தெய்வ
வழிபாட்டிற்கு இடந்தராத நெஞ்சம் படைத்த அம் மன்னன், தன்
கொடுமையின் வேகத்தைத் தணிக்கும் பொருட்டு, நீரில் தோன்றும்
நெருப்புப் போன்ற தாமரை மலரில் அன்னம் உறங்கி வாழும் ஒரு
தடாகத்தை நோக்கிப் போகையில், மோயிசன் குறுக்கிட்டு, "நான்
சொன்னவற்றிற்கு இணங்க மறுப்பாயானால், முடிவில்லாத துயரத்தில்
மூழ்குவாய்" என்று சொல்கின்றான்.
| 29 |
சொல்லிய
விசையி லேந்துஞ் சூரலைச் சுழற்றி நிற்பக்
கல்லிய மலர்கள் வாடக் கயலினந் தளர்ந்து மாள்க
வுல்லியர் மயங்க யாரு முண்ணுநீ ரின்றிச் சோரப்
புல்லிய புனல்கள் யாவும் புண்ணினீ ராயிற் றன்றே. |
| |
"சொல்லிய
விசையில், ஏந்தும் சூரலைச் சுழற்றி நிற்ப,
கல்லிய மலர்கள் வாட, கயல் இனம் தளர்ந்து மாள்க,
உல்லியர் மயங்க, யாரும் உண்ணும் நீர் இன்றிச் சோர,
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே. |
"அவ்வாறு
சொல்லிய வேகத்தோடு, தன் கையில் ஏந்தும் பிரம்பை
மோயிசன் சுழற்றி நிற்பவே, தேனுள்ள மலர்கள் வாடவும், மீன் இனங்கள்
தளர்ந்து மடியவும், நீர் நூல் வல்லோர் மயங்கவும், எல்லோரும்
உண்பதற்குரிய நீர் இல்லாமல் சோரவுமாக, அந்நாட்டிற் பொருந்திய நீர்
நிலைகள் எல்லாம் இரத்தமாயின.
|