|
'அன்றே'
அசைநிலை, புண்ணின் நீர் - புண் நீர்; இரத்தம்,
'புனல்கள்' என்ற பன்மைக்கு 'ஆயிற்று' என்ற ஒருமை மயங்கி வந்தது.
| 30 |
மீட்டருஞ்
சூரல் வீசி வீழ்ந்தன நுணலை மாரி
தீட்டருஞ் சயன மாடஞ் சித்திரக் கூடம் யாவு
மீட்டருங் கனகச் சாலை யிவைமுத லிடங்க டோறும்
வாட்டருந் துயர்கொ ணாட்டின் மல்கிய
நுணலை யீட்டம். |
| |
"மீட்டு அரும்
சூரல் வீசி, வீழ்ந்தன நுணலை மாரி;
தீட்டு அருஞ் சயன மாடம், சித்திரக்கூடம் யாவும்
ஈட்டு அருங் கனகச் சாலை இவை முதல் இடங்கள் தோறும்,
வாட்டு அருந் துயர் கொள் நாட்டில், மல்கிய நுணலை ஈட்டம். |
"அரிய
பிரம்பை மோயிசன் மீண்டும் சுழற்றவே, தவளைகள்
மழை போல் வானினின்று விழுந்தன; ஆண்டவனால் வாட்டப்படும்
அரிய துயருக்கு ஆளான அந்நாட்டில், தீட்டுவதற்கு அரிய அரசன்
படுக்கைமாடத்தினும், சித்திரக் கூடங்கள் யாவற்றிலும், தேடுவதற்கரிய
பொன் நிறைந்த கருவூலத்திலும், இவை முதலிய இடங்கள் எங்கும்
தவளைக்கூட்டங்கள் மிகுந்து கிடந்தன.
| 31 |
பண்ணிக லிசையாற்
கோகு பயன்படா தென்ன வன்னா
னெண்ணிகல் விடாமை நாத னேவலிற் சூர லோங்கி
யுண்ணிக ளெண்ணில் மொய்ப்ப வுழிதொறும் வெருவு
மொய்த்துப்
புண்ணிகழ் கிடந்த நாடு பொருவிலா வருந்திற் றன்றே. |
| |
பண் இகல் இசையால்
கோகு பயன் படாது என்ன,
அன்னான் எண் இகல் விடாமை, நாதன் ஏவலில் சூரல் ஓங்கி,
உண்ணிகள் எண் இல் மொய்ப்ப, உழி தொறும் வெருவும்
மொய்த்து,
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு இலா வருந்திற்று அன்றே. |
"வீணை
போன்ற இசையால் கழுதை பயனடையாத தன்மை போல,
அம்மன்னன் தான் எண்ணிய பகையை விடாமையால், ஆண்டவன்
ஏவலால் மோயிசன் பிரம்பை ஓங்கியதும், உண்ணிகள் எண்ணில்லாமல்
நாடெங்கும்
|