|
மொய்க்கவே, இடம்
தோறும் அச்சமும் மொய்த்து, அவை கடித்துப் புண்
கொண்டு கிடந்த நாடு நிகரின்றி வருந்தியது.
'அன்றே'
அசைநிலை.
| 32 |
தீயினங்
குளித்த நெஞ்சான் செருக்குலத் தறாது சீற
தூயினம் வெருவ மீண்டு சூரலை யாட்டுந் தன்மைத்
தீயின மெண்ணு மீறு மின்றியே யெவணு மூய்த்து
வீயின மலர்ந்த நாடு வீந்ததோர் பிணத்தற் றாமே. |
| |
"தீ
இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற,
தூய் இனம் வெருவ, மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து,
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மூய்த்து,
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே. |
"தீமை
வகைகளில் மூழ்கிய நெஞ்சை உடைய மன்னன் தன்
செருக்கு நீங்காமல் மேலும் சீறினான். எனவே, நல்லோர் இனம் நடுங்குமாறு,
மோயிசன் மீண்டும் பிரம்பை ஆட்டும் தன்மையால், ஈ வகைகள்
எண்ணிக்கையும் முடிவும் இல்லாமல் எங்கும் திரண்டு மூடிக் கொள்ளவே,
மலர் வகைகள் மலர்ந்து நின்ற எசித்து நாடு இறந்து கிடந்த ஒரு பிணம்
போல் தோன்றும்.
| 33 |
வெருவுற வரசன்
போக விடைசெய விடரு நீங்கு
முருவற விடர்க ணீங்க வுரைத்தவை மறுத்துச் சீறச்
செருவுறச் சாதி யோங்கச் சிந்துர முதல்மா வெல்லாந்
தருவற வுணரா நோயாற் றளர்ந்து நொந் திறக்கு மாதோ.
|
| |
"வெரு உற அரசன்,
போக விடை செய, இடரும் நீங்கும்.
உரு அற இடர்கள் நீங்க, உரைத்தவை மறுத்துச் சீற,
செரு உறச் சாதி ஓங்க, சிந்துரம் முதல் மா எல்லாம்
தரு அற, உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ.
|
"அரசன்
அது கண்டு அச்சம் கொண்டு, யூதருக்குப் போக விடை
கொடுக்கவே, அத்துன்பமும் நீங்கும். துன்பங்கள் உருத் தெரியாமல்
நீங்கவே, மன்னன் தான் முன் உரைத்தவற்றை மறுத்துச் சீறுவான்.
மோயிசன் போர்
|