பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்39

தொடுத்த தன்மையாகப் பிரம்பை ஓங்கவே, யானை முதலிய விலங்குகள்
எல்லாம் தம் நிலை கெட்டு, யாரும் உணர முடியாத நோயால் தளர்ந்து
நொந்து இறக்கும்.

     'மாதோ' அசைநிலை.

                   34
சுட்டநோ யாறி னாறாத் துகடருந் தருக்கு நீக்க
விட்டநோய் போதா வேகத் திவன்சுழற் சூர றன்னாற்
குட்டநோ யரசனாதி கொண்டுளங் குலைந்தார் யாரும்
பட்டநோ யொன்று மின்றிப் பரிவற யூதர் வாழ்ந்தே.
 
"சுட்ட நோய் ஆறின் ஆறாத் துகள் தரும் தருக்கு நீக்க,
விட்ட நோய் போதா, வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால்
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு, உளம் குலைந்தார்
                                           யாரும்,
பட்ட நோய் ஒன்றும் இன்றிப் பரிவு அற யூதர் வாழ்ந்தே.

     "தீயினால் சுட்ட புண் ஆறினாலும் ஆறாத தன்மையாய் பாவம்
விளைவிக்கும் செருக்கை அம்மன்னிடமிருந்து நீக்கும் பொருட்டு, மீண்டும்
வரவிட்ட இந்நோய் போதாமல், இம் மோயிசன் வேகமாய்ச் சுழற்றிய
பிரம்பினால் அரசன் முதல் அனைவரும் குட்ட நோய்க் கொண்டனர்.
யூதர் மட்டும் எசித்தியர் பட்ட துன்பம் ஒன்றுக்கும் ஆளாகாமல்
வருத்தமின்றி வாழ்ந்திருக்க, எசித்தியர் எல்லோரும் அவற்றால் உள்ளம்
குலைந்தனர்.

                    35
உலைமுகந் தருந்துந் தீய்நெஞ் சுருவுறச் சூர லோங்கி
யலைமுகந் தருந்தி யையென் றழன்முகி லார்த்து மின்னிச்
சிலைமுகந் தருந்திக் கான்ற சீரெனப் பெய்த வாலி
கொலைமுகந் தருந்தி யெங்குங் கொல்லுயி ரளவொன்
                                      றுண்டோ.
 
"உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற, சூரல் ஓங்கி,
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி,
சிலை முகந்து அருந்திக் கான்ற சீர் எனப் பெய்த ஆலி,
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று                                           உண்டோ?

     "உலையினின்று தீயை முகந்து அருந்தும் மன்னனின் நெஞ்சம்
அச்சம் கொள்ளுமாறு, மோயிசன் மீண்டும் பிரம்பை ஓங்கிச் சுழற்றவே
மேகம் கடல் நீரை முகந்து அருந்தி விரைந்தெழுந்து முழங்கி
நெருப்புப்போல் மின்னி, கற்களை முகந்து அருந்திக் கக்கிய தன்மைபோலப்
பெய்த ஆலங்கட்டி