பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்40

மழை, கொலையை முகந்து அருந்தியதுபோல் எங்கும் கொன்ற
உயிர்களுக்கு ஓர் அளவும் உண்டோ?

     இரண்டாம் அடியில், 'முகில் அலை முகந்து அருந்தி, ஐ என்று
ஆர்த்து, அழல் மின்னி' எனச் சொற்களை மாற்றிப் பொருள் கொள்க.

                    36
மதங்கலந் தரசன் கொண்ட மறங்கழிந் திலனாந் தன்மை
கதங்கலந் தசைத்த சாதி கடுகிய பதங்க மெங்குஞ்
சிதங்கலந் தலர்ந்த நாட்டிற் சிறுபுலொன் றின்றி யாவு
மிதங்கலந் திமைக்கு முன்ன ரிற்றழித் தாயிற் றன்றே.
 
"மதம் கலந்து அரசன், கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை,
கதம் கலந்து அசைத்த சாதி கடுகிய பதங்கம், எங்கும்
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும்
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்தாயிற்று அன்றே.

     "அரசன் மதம் பிடித்து, தான் கொண்ட பிணக்கு நீங்காதவன்
ஆகும் தன்மை கண்டு, மோயிசன் சினத்தோடு அசைத்த பிரம்பினால்
விரைந்து வந்த வெட்டுக்கிளிகள், குளிர்ச்சிப் பொருந்தி மலர்கள்
மலர்ந்த அந்நாட்டில் எங்கும் சிறிய புல் ஒன்றுதானும் இல்லாமல்
யாவற்றையும் இமைக் கொட்டும் முன் இதமாக ஒடித்து அழித்து
முடிந்தன.

     'அன்றே' அசைநிலை. 'பதங்கம்' ஒருமைபோல நின்று,
'அழித்தாயிற்று' என ஒருமை முடிபே கொண்டதாயினும், கருத்து
நோக்கிப் பன்மையாகக் கொள்க. பின் 38ஆம் பாடலில் சங்கடை
பதங்கம் என வருவதும் நோக்குக. சிதம் 'சீதம்' என்பதன் குறுக்கல்
விகாரம்.

                   37
துச்சிறை யுளம்போன் றள்ளுந் தொகுதியா                          லிருள்மொய்த் தாடாக்
கைச்சிறை கடக்க றேற்றா காற்சிறை யாகி யெங்கு
மெய்ச்சிறை பட்ட யாரும் வெருவியார்த் தலறி நோக
மைச்சிறை பட்ட நாடு மறச்சிறை நரகொத் தாமால்.