|
| 25 |
பிறந்தநாள்
துயரொக்கப் பிறந்து பேராந் துணைவைகிச்
சிறந்தநா டகலாநூற் றிறங்கொண் டாசை யகன்றனரே
லிறந்தநா ளுய்வரலா விருந்த நாட்டிற் றுயராற்றார்
பறந்தநாள் கூண்டொழியும் பறவை யென்றா
னதிட்டனென்பான். |
| |
"பிறந்த நாள்
துயர் ஒக்கப் பிறந்து, பேராத் துணை வைகி,
சிறந்த நாடு அகலா, நூல் திறம் கொண்டு ஆசை அகன்றனரேல்,
இறந்த நாள் உய்வர்; அலால், இருந்த நாட்டில் துயர் ஆற்றார்,
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை" என்றான்
அதிட்டன் என்பான் |
"மனிதர் பிறந்த
நாளில் துயரமும் கூடவே பிறந்து, பெயராத
துணையாக என்றும் அவரோடு தங்கும். அதற்குத் தப்பவென்று தாம் பிறந்த
சிறந்த நாட்டை விட்டு நீங்காமல், தாம் கற்ற அறிவு நூலின் துணை
கொண்டு ஆசையை அகற்றி வாழ்வாராயின், அவரே தாம் இறந்த நாளில்
வான்வீடு பெற்று உய்வர். அப்படியல்லாமல், தாம் இருந்த நாட்டில் வரும்
துயரங்களைப் பொறுக்க மாட்டாதவராய் நாடு விட்டு ஓடுவோர், பறக்கத்
தெரிந்த நாளில் கூட்டை விட்டு நீங்கும் பறவைக்கு நிகராவர்" என்று
அதிட்டன் என்போன் கூறினான்.
இப்பாடலுக்குப்
பழைய உரையாசிரியர் வேறு விதமாய் உரை விரித்து,
அடிக்குறிப்பின்கண், "ஆகையால், மனிதர் ஆசைப்படாதிருப்பதும் அரிது,
கொண்ட ஆசை அறக்காட்டில் வருவதும் நல்லதென்பது கருத்து" எனக்
குறிப்பிடுவது, சொற் பொருள் முறையாலும் கருத்துப் பொருள் வகையாலும்
பொருத்தமாய்த் தோன்றவில்லை.
| 26 |
நசையட்டு நசைகடந்த நயஞ்செய் வான்றா ளணுகின்மெய்ப்
பசையட்டு வாழ்வரலாற் பகைத்த பாரில் வதிந்தனநாள்
வசையட்டு வாழ்பவரே மழுநீர் சூழ்ந்த மலைநண்ணி
யசைவட்டு நிலைபெறுத லன்ன வென்றான் மறைவடிவான். |
|