|
"நசை அட்டு,
நசை கடந்த நயம் செய்வான் தாள் அணுகின், மெய்ப்
பசை அட்டு வாழ்வர்; அலால், பகைத்த பாரில் வதிந்தன நாள்,
வசை அட்டு வாழ்பவரே, மழு நீர் சூழ்ந்த மலை நண்ணி
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன" என்றான் மறை வடிவான். |
வேத வடிவினனாகிய
சூசை, "ஆசையைத் தானும் கொன்று,
ஆசைக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரின்பத்தை மக்களுக்குத்
தருபவனுமாகிய ஆண்டவன் அடியைத் துணையாக அணுகினால்,
அத்தகையோர் உடலால் எழும் ஆசையைக் கொன்று மேலுலகில்
நல்வாழ்வு பெறுவர்; அல்லாமலும், தம்மைப் பகைத்த இம்மண்ணுலகில்
வாழ்ந்த நாளிலும், கடல் நீர் சூழ்ந்த ஒரு மலையை அடைந்து அசைவற்று
நிலைபெறுதல் போல, வசையின்றி வாழ்பவராவார்" என்றான்,
'பாரில் வதிந்தன
நாள்' எனப் பின்னர் விதந்து கூறிய தொடரின்
ஆற்றலால், முன்னர் 'வாழ்வர்' என்பது, 'மேலுலகில் வாழ்வர்' என
விரிக்கப்பட்டது.
| 27 |
போரேந்திப்
பகைத்தனபோற் புணரி பன்னாட் புடைபுடைப்ப
வாரேந்தி முகிற்புதைத்த வயிரக் குன்றுங் குன்றுமன்றோ
தாரேந்தி வசையேந்துஞ் சடத்த மண்ணோர் தளிர்த்தபகைச்
சூரேந்தி நிற்பரெவர் சொன்மி னென்றான் றொல்லுணர்வான். |
| |
"போர் ஏந்திப்
பகைத்தன போல், புணரி பல் நாள் புடை புடைப்ப,
வார் ஏந்தி முகில் புதைத்த வயிரக் குன்றும் குன்றும் அன்றோ?
தார் ஏந்தி வசை, ஏந்தும் சடத்த மண்ணோர் தளிர்த்த பகைச்
சூர் ஏந்தி நிற்பர் எவர்? சொல்மின்" என்றான் தொல் உணர்வான். |
பழமையான அனுபவ
உணர்வு உடையவனாகிய அதிட்டன்,
"போருக்கு எழுந்து பகைத்த தன்மையாய், கடல் பல நாளும் தன் பக்கத்தில்
மோதுவதனால், மேகம் நீரைச் சுமந்து கொண்டு மூடிய வயிர மலையும் தன்
வலிமை குன்றும் அல்லவா? பாவத்தையே மாலையாக அணிந்து, மிஞ்சும்
|